எரிச்சலில்தான் ப்ரௌட் சிங்கிள் என சொல்கிறார்கள்... நீயா நானா கலக்கல் டாபிக்
சென்னை : விஜய் தொலைக்காட்சியில் வாரந்தோறும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா.
இந்த நிகழ்ச்சியில் ஒரே டாப்பிக்கில் இருவேறு மன ஓட்டங்களை தொகுத்து வழங்கி வருகிறார் கோபிநாத்.
இந்த வாரம் ப்ரௌட் சிங்கிள் என்ற டாப்பிக்கில் இரு தரப்பினர் பேசவுள்ளனர். இதன் கலக்கல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

நீயா நானா தொடர்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக நீயா நானா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு தொடரை இத்தனை ஆண்டுகள் அதுவும் ஒரே தொகுப்பாளர் வழங்கி வருவது அத்தனை எளிதானதல்ல. இதை சாத்தியப்படுத்தியுள்ளார் தொகுப்பாளர் கோபிநாத்.

லட்சக்கணக்கான ரசிகர்கள்
வாரந்தோறும் வித்தியாசமான தலைப்புகளில் இந்த ஷோ நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு உலக அளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் காணப்படுகின்றனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சிக்காக கோபிநாத்திற்கு விருது வழங்கப்பட்ட நிலையில், மக்கள்தான் இந்த நிகழ்ச்சியின் ஸ்டார்ஸ் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.
Recommended Video

ப்ரௌட் சிங்கிள் தலைப்பு
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் ப்ரௌட் சிங்கிள் என்ற தலைப்பின் இருவேறு கோணங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதையொட்டி ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் இருவேறு கருத்துக்கள் குறித்து சூடான விவாதங்கள் அனல் பறந்தன.

கலாய்த்த எதிர்தரப்பினர்
தியேட்டர்களில், மால்களில் ஜோடிகளை பார்க்கும்போது ஏற்படும் வயிற்றெரிச்சலே ப்ரௌட் சிங்கிள் என்று அவர்களை கூற வைப்பதாக எதிர் தரப்பினர் நகைச்சுவையுடன் கலாய்ப்பதையும் பார்க்க முடிந்தது. இதேபோல சினிமா காதல் பாடல்களை ப்ரௌட் சிங்கிள் தரப்பினர் கலாய்த்தது ப்ரமோவில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications