கண்கலங்கி நின்ற கணவர்.. கைகொடுத்த மனைவி.. நீயா நானா ஷோவில் சுவாரஸ்யம்!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான விவாத நிகழ்ச்சியான நீயா நானா ஷோ கடந்த 10 ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் இந்த ஷோவை ஆங்கர் கோபிநாத் நடத்தி வருகிறார்.

இந்த வாரமும் சுவாரஸ்யமான தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. சூர்யவம்சம் போல காதலித்து தம்பதிகளாய் முன்னேறியவர்கள் என்ற தலைப்பில் நீயா நானா ஷோ நடத்தப்பட்டது.

நீயா நானா ஷோ

நீயா நானா ஷோ

விஜய் டிவியின் நம்பர் ஒன் விவாத நிகழ்ச்சி நீயா நானா. கடந்த 10 ஆண்டுகளை கடந்து இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமே நிகழ்ச்சியில் தொடர்ந்து ஆங்கர் கோபிநாத்தே நடத்தி வருவதுதான். தன்னுடைய சமரசம் இல்லாத கேள்விகளால் விவாதத்தில் ஈடுபடுபவர்களை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார் கோபிநாத்.

சுவாரஸ்யமான விவாதங்கள்

சுவாரஸ்யமான விவாதங்கள்

இந்த நிகழ்ச்சி கோபிநாத்திற்கு பல்வேறு விருதுகளையும் ஏராளமான ரசிகர்களையும் புகழையும் கொடுத்துள்ளதுடன் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்றுத் தந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யமான விவாதங்களை முன்னெடுத்து சென்றுவருகிறார் கோபிநாத்.

சிறப்பான தலைப்புகள்

சிறப்பான தலைப்புகள்

இந்த வாரமும் சிறப்பான தலைப்புடன்தான் கோபிநாத் களமிறங்கியுள்ளார். சூர்யவம்சம் போல காதலித்து தம்பதிகளாய் முன்னேறியவர்கள் என்ற தலைப்பில் இந்த வார நீயா நானா ஷோ நடைபெற்றது. இதில் பலரும் தங்களுடைய வாழ்க்கை பயணத்தை, தியாகங்களை மகிழ்ச்சிகளை ஷேர் செய்துக் கொண்டனர்.

வாழ்க்கையை இழந்த நபர்

வாழ்க்கையை இழந்த நபர்

அந்த வகையில், ஒருவர் மழை வெள்ளத்தால் தான் முற்றிலும் தன்னுடைய வாழ்க்கையை இழந்த நிலையில், தன்னுடைய மனைவி கொடுத்த நம்பிக்கையால், உணவுத் தொழிலை தள்ளுவண்டியில் துவங்கி தற்போது ஹோட்டல் வைப்பது வரை வளர்ந்துள்ளது குறித்த தன்னுடைய வாழ்க்கையை பகிர்ந்துக்கொண்டார்.

மனைவியின் தியாகம்

மனைவியின் தியாகம்

இந்த கடினமான காலத்தில் தன்னுடன் இருந்து தனக்கு வழிகாட்டியாய் இருந்த தன்னுடைய மனைவியின் தியாகத்தையும் அவர் பகிர்ந்துக் கொண்டார். இந்த சம்பவத்தை அவர் கூறும்போது அவரது மனைவி கண்கலங்கியதையும் நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. அவர்கள் இருவரும் கஷ்டகாலத்தில் சூரியவம்சம் படத்தை போல ஒன்றிணைந்து செயல்பட்டதை ஆனந்தத்துடன் பகிர்ந்துக் கொண்டனர்.

பல காதல் கதைகள்

பல காதல் கதைகள்

இதுபோல இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்த இளைஞர், ஒருபக்க பார்வையை இழந்த மனைவி சிறப்பாக கவனித்துக் கொண்ட கணவர் என அடுத்தடுத்த காதல்களை கோபிநாத் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களும் இந்த இக்கட்டான நிலையில் தன்னை விட்டுப் பிரியாத தியாகங்களை நினைவுக்கூர்ந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X