பால் பாக்கெட் வாங்கிவரும் கோபி.. கலாய்த்த தாத்தா.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த பரபரப்பான தொடர்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.
பாக்கியாவுடனான விவாகரத்துக்கு பிறகு ராதிகாவை திருமணம் செய்துக் கொண்ட கோபியின் வாழ்க்கையில் அடுத்தடுத்த திருப்பங்கள் காணப்படுகின்றன.
தான் எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்காமல் கோபி திண்டாடுவதும் தினந்தோறும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அவர் உள்ளாவதையும் காண முடிகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர், தொடர்ந்து ரசிகர்களின் ரசிகர்களின் விருப்பத்திற்கு உரிய தொடராக காணப்படுகிறது. இந்த தொடரை காண்பதற்காகவே ரசிகர்கள் டிவியை ட்யூன் செய்துக் கொண்டு காத்திருப்பார்கள். இதனிடையே நித்தம் ஒரு சிறப்பான எப்சோட்களை சிறப்பாக ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது இந்தத் தொடர்.

சிறப்பான எபிசோட்கள்
ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்தத் தொடர் அனுதினமும் சிறப்பான எபிசோட்களை வழங்கிவரும் நிலையில், பாக்கியாவுடனான விவாகரத்து, ராதிகாவுடனான திருமணம் என தொடர் களைகட்டி வருகிறது. சமீபத்தில் கொடைக்கானலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருடன் நடந்த மகா சங்கமமும் சிறப்பாக அமைந்தது.

அழகான மனைவி
இதையடுத்து படித்த அழகான மனைவிதான் வேண்டும் என ஒற்றை காலில் நின்ற கோபிக்கு தலையில் இடிதான் விழுந்தது. தொடர்ந்து தனது வீட்டின் அருகில் குடிபுகுந்தார் கோபி. நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்ற கதையாக, இவர் பால் பாக்கெட் வாங்க வந்ததை பார்த்து அவரது அப்பா கலாய்த்தார். நடத்துடா. இது ஆரம்பம்தான் என அவர் கோபியை வம்பிழுக்க, இதனால் பால் பாக்கெட் வாங்கினது ஒரு குத்தமாய்யா என்று நொந்து போகிறார் கோபி.

இது ஒரு குத்தமாய்யா?
இது போன்ற செயல்களையெல்லாம் கோபி பாக்கியாவுடன் இருந்தபோது செய்ததில்லை. அவர்தான் வீட்டில் சம்பாதிக்கிறார் என்பதால் அவருக்கு அளவிற்கு அதிகமான மரியாதையை பாக்கியா கொடுப்பார். கேட்ட நேரத்தில் அவருக்கு அனைத்தும் தட்டில் கிடைக்கும். ஆனால் ராதிகாவுடன் இருக்கும் போது, காபியை ஆர்டர் செய்ய சொல்கிறார். ஓட்ஸ் கஞ்சியே கிடைக்கிறது. இதனால் நொந்து நூடுல்ஸ் ஆகிறார் கோபி.

சிறப்பான எபிசோட்கள்
பாக்கியலட்சுமி தொடர் தொடர்ந்து சிறப்பான எபிசோட்களை தந்து வருகிறது. இந்தத் தொடரின் சுவாரஸ்யம் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது. தன்னுடைய கணவனுக்கு 40 லட்சம் ரூபாயை அந்த வீட்டிற்காக தருவதாக சபதம் போடும் பாக்கியா தற்போது 40 ஆயிரம் ரூபாயை டிரான்ஸ்பர் செய்கிறார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











