ஓரு தரமான சிரிப்பு புயல்.. எதிர்கொள்ள தயாரா மக்களே.. விஜய் சபையில் பார்க்கலாம் வாங்க!

சென்னை : விஜய் டிவி அடுத்தடுத்த சிறப்பான நிகழ்ச்சிகளை களமிறக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சேனலில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 19வது நாளில் நடைபோட்டு வருகிறது. வித்தியாசமான டாஸ்க்குகளையும் கொடுத்து வருகிறது.

வித்தியாசமான பல நிகழ்ச்சிகளை கொடுத்துவரும் சேனலில் புது வரவாக வரும் ஞாயிற்றுக்கிழமை விஜய் சபை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

சிறப்பான நிகழ்ச்சிகள்

சிறப்பான நிகழ்ச்சிகள்

விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நிகழ்ச்சிகள் என்றாலே இந்த சேனல் தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருகிறது. அந்த வகையில் புத்தம் புதிய நிகழ்ச்சிகளை களமிறக்கி வருகிறது. அண்டாகாகசம் உள்ளிட்ட புத்தம் புது நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

அந்த வகையில் சேனலில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி துவங்கப்பட்டு, இன்றைய தினம் 19வது நாளை எட்டியுள்ளது. கடந்த 5 சீசன்களை சிறப்பாக கொடுத்தது போல இந்த சீசனையும் பல்வேறு டாஸ்க்குகளால் நிரப்பி வருகிறது சேனல். அந்த வகையில் இந்த சீசனில் அடிதடிக்கும், ஆர்ப்பாட்டத்திற்கும் பஞ்சமில்லாமல் உள்ளது.

விஜய் சபை நிகழ்ச்சி

விஜய் சபை நிகழ்ச்சி

தற்போது விஜய் சபை என்ற புதிய நிகழ்ச்சியை வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்ப உள்ளது விஜய் டிவி. இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய்யின் அரசவையில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருகிறது காமெடி தர்பார் என்று ப்ரமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த காட்சிகள்

ரசிகர்களை கவர்ந்த காட்சிகள்

அந்த வகையில் பொன்னியின் செல்வன் முதல் பல திரைப்படங்களின் காட்சிகளை கொண்டு சிரிப்பு தர்பார் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி சுனிதா முதல் பல நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர். அடுத்தடுத்த காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

சிரிப்பு புயல் ஆன் தி வே

சிரிப்பு புயல் ஆன் தி வே

ஒரு தரமான சிரிப்பு புயல் ஆன் தி வே என்று கேப்ஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அண்டா காகசம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின்மூலம் ரசிகர்களை அதிகமாக எண்டர்டெயின் செய்துவரும் விஜய் டிவி இந்த நிகழ்ச்சி மூலம் மேலும் ரசிகர்களை கட்டிப் போடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X