வீட்டை விட்டு வெளியேறும் ஐஸ்வர்யா.. கண்ணனின் முடிவு என்ன.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பரபரப்பு!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
குடும்ப ஒற்றுமைக்கு உதாரணமாக காட்டப்பட்ட இந்தத் தொடரில் முன்னதாக கதிர் -முல்லை பிரிந்து சென்றதையே ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது அடுத்தடுத்த சகோதரர்கள் பிரியும்படியான காட்சிகள் அடுத்தடுத்த எபிசோட்களில் காட்டப்பட்டு வருகின்றன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இந்தத் தொடரில் 4 அண்ணன் தம்பிகள் மற்றும் அவர்களின் மனைவிகள் என ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் குழந்தைகளும் இந்த ஒற்றுமையான குடும்பத்தில் அங்கமாக இருந்தனர். மீனாவின் அப்பாவின் சதியால் இந்தக்குடும்பம் தங்களது பூர்வீக வீடு, கடை என அனைத்தையும் இழந்த நிலையில், சிறிய வீட்டில் அட்ஜெஸ்ட் செய்துக் கொண்டு வாழ்ந்து வந்தனர்.

மொய் விவகாரம் -சகோதரர்கள் பிரிவு
தன்னுடைய தம்பிகள் இருவரும் செட்டிலான வாழ்க்கையை வாழ்ந்துவந்த நிலையில் சில தினங்களாகவே புகைச்சலில் இருந்த ஜீவா, மொய் எழுதும் விஷயத்தில் அனைவரும் தன்னை கழட்டி விட்டதாக கோபத்தில் தான் இனிமேல் அந்த வீட்டிற்கு வர மாட்டேன் என்று கூறி மாமனார் வீட்டோடு தங்கி விடுகிறார். இதையொட்டிய அவரது குற்றச்சாட்டுகள், சமாதானங்கள் உள்ளிட்டவற்றை சில தினங்கள் அடுத்தடுத்த எபிசோட்களில் கொடுத்தது இந்த சீரியல்.

கோபத்தில் ஐஸ்வர்யா
தொடர்ந்து வீட்டிற்கு வரும் குடும்பத்தினர், நடந்த அனைத்திற்கும் கண்ணன்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர். இதையடுத்து கோபப்படும் ஐஸ்வர்யா, தாங்கள் அட்ஜெஸ்ட் செய்துக் கொண்டுதான் வாழ்ந்துவருவதாக கூறுகிறார். இதையடுத்து அப்படி யாரும் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறார் மூர்த்தி. இதையடுத்து இனிமேல் இந்தக் குடும்பத்தில் இருந்தால் தனக்கு மரியாதை இல்லை என்று பெட்டி படுக்கையை தூக்கிக் கொண்டு கிளம்புகிறார் ஐஸ்வர்யா.

கண்ணனிடம் கோபப்படும் ஐஸ்வர்யா
அவரை தடுக்கும் தனம், மூர்த்தியிடம் ஆதங்கப்படுகிறார். ஆனால் அவரோ, வீட்டைவிட்டு வெளியில் செல்ல விரும்புபவரிடம் என்ன சொல்ல முடியும் என்று கோபத்துடன் கூறுகிறார். இதையடுத்து ஐஸ்வர்யா கண்ணனின் கையை பிடித்துக் கொண்டு வெளியேற முயற்சிக்கிறார். ஆனால் அவரோ, மனைவியை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். இதையடுத்து அவருக்கு தான் வேண்டுமா அல்லது குடும்பம் வேண்டுமா என்று கோபத்துடன் கேட்கிறார் ஐஸ்வர்யா. இவ்வாறு சீரியலில் ப்ரமோ காணப்படுகிறது.

கண்ணனின் முடிவு என்ன?
இந்த விவகாரத்தில் தன்னை ஆசை ஆசையாய் வளர்த்த அண்ணனுடன் இருப்பதா அல்லது மனைவியுடன் செல்வதா என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார் கண்ணன். குடும்பத்தில் வெடிக்கும் இந்த பிரச்சினையை காரணமாக வைத்துக் கொண்டு, வீட்டை விட்டு பிரிந்து செல்ல வில்லத்தனமாக முயற்சிக்கிறார் ஐஸ்வர்யா. முதலில் ஜீவா, தற்போது கண்ணன் என அடுத்தடுத்த பிரிவால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது ரசிகர்கள் விரும்பும் வகையில் பரபரப்பாக சென்று வருகிறது.


Click it and Unblock the Notifications











