யாரும் கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம்.. குடும்பம் உடைய அஸ்திவாரம் போடும் மூர்த்தி!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் காணப்படுகிறது.

குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தி இந்தத் தொடரின் கதைக்களம் காணப்பட்டது. யார் எப்படி சதி செய்தாலும் தங்களின் ஒற்றுமையை விட்டுக் கொடுக்காமல் இந்தக் குடும்பத்தினர் இருந்தனர்.

இந்நிலையில் அடுத்தடுத்த சகோதரர்கள் வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகள் இந்தத் தொடரில் அரங்கேறி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்

விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் காணப்படுகிறது. நான்கு சகோதரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் என குடும்ப ஒற்றுமையை கதைக்களமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இவர்களின் ஒற்றுமையை குலைக்க நடைபெறும் சதிகள் அனைத்தையும் முறியடித்து குடும்பத்திற்காக சிலபல தியாகங்களை இந்த கேரக்டர்கள் செய்வதாகவும் தொடர்ந்து எபிசோட்கள் ஒளிபரப்பாகி வந்தன.

குடும்ப ஒற்றுமையை சொல்லும் தொடர்

குடும்ப ஒற்றுமையை சொல்லும் தொடர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரை மீனாவின் அப்பா, அவர்களது வீட்டை விட்டு வெளியேற்றினாலும் கூட்டுக்குள் இருக்கும் பறவைகளை போல அனைவரும் சிறிய வீட்டில் அட்ஜெஸ்ட் செய்துக் கொண்டு இருக்கும்படியான காட்சிகளும் இந்தத் தொடரின்மீது, கேரக்டர்கள் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது. தொடர்ந்து இவர்கள் அனைவரும் இணைந்து வீடு கட்ட முயல்வதும் ஒருவரின் நலனின் மற்றவர்கள் அக்கறை காட்டுவதும் என சீரியல் தொடர்ந்து சுவாரஸ்யத்தை கூட்டியது.

ஒற்றுமையை குலைத்த சம்பவம்

ஒற்றுமையை குலைத்த சம்பவம்

இந்நிலையில் தற்போது இந்த ஒற்றுமைக்கு பங்கமாக மீனாவின் தங்கை திருமணம் மற்றும் மொய் எழுதுவதில் பிரச்சினை என அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை தந்துள்ளார் இயக்குநர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பெயரில் மொய் எழுதும்படி கண்ணனிடம் மூர்த்தி சொல்ல, அவரோ, அனைவரும் தனித்தனியாக எழுதுவதால் மூர்த்தியின் பெயரிலேயே மொய் பணத்தை எழுதுகிறார். இதையடுத்து மூர்த்தி, கண்ணன் மற்றும் கதிர் ஆகியோர் தனித்தனியாக மொய் எழுதும்படி நேர்கிறது.

கண்ணனை அறையும் மூர்த்தி

கண்ணனை அறையும் மூர்த்தி

ஆனால் தனியாக மொய் எழுதக்கூடாது என்ற தீர்மானத்தில் இருக்கும் ஜீவா இதனால் தன்னுடைய மாமனாரிடம் அவமானப்படுகிறார். இதையடுத்து கொதித்தெழும் ஜீவா, தன்னுடைய குடும்பத்தினர் அனைவரிடமும் சண்டை போட்டு, இனிமேல் தான் அந்த குடும்பத்திற்குள் வரமாட்டேன் என்று கூறுகிறார். இதனால் ஆத்திரப்படும் மூர்த்தி, சபையில் வைத்தே கண்ணனை கன்னத்தில் அடிக்கிறார்.

 அவமானத்தில் குறுகிய கண்ணன்

அவமானத்தில் குறுகிய கண்ணன்

இதனால் கண்ணன் மட்டுமில்லாமல் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் அவமானத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் ஜீவா இல்லாமல் வீட்டிற்கு வரும் குடும்பத்தினர், ஜீவா இந்த முடிவை எடுக்க கண்ணன்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர். இதைக் கேட்கும் ஐஸ்வர்யா, தன்னுடைய கணவனை தொடர்ந்து குற்றம் சாட்ட வேண்டாம் என்று கொதிக்கிறார். தொடர்ந்து பேசும் முல்லை, கண்ணன் 40,000 ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு 17,000 மட்டுமே வீட்டிற்கு தருவதை போட்டு உடைக்கிறார்.

ஐஸ்வர்யாவின் கேள்வி

ஐஸ்வர்யாவின் கேள்வி

இவ்வாறு கண்ணனின் அடுத்தடுத்த சம்பவங்கள் வெளிப்பட, சம்பளம் மொத்தத்தையும் கொடுத்துவிட்டு, கையேந்தி நிற்க வேண்டுமா என ஐஸ்வர்யா பதில் கேள்வி கேட்கிறார். மேலும் இந்த வீட்டில் அனைத்தையும் அட்ஜஸ்ட் செய்துக் கொண்டு கஷ்டப்பட்டு தான் இருப்பதாகவும் கூறுகிறார். இதைகேட்டு ஆத்திரப்படும் மூர்த்தி, அப்படி யாரும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டாம் என்று கூறுகிறார். இதை தொடர்ந்து ஐஸ்வர்யா தாங்கள் இருவரும் வீட்டைவிட்டு போக வேண்டுமா என்பதாக தொடரின் ப்ரமோவில் காணப்படுகிறது.

பிரிவுக்கு அடித்தளமிட்ட மூர்த்தி

பிரிவுக்கு அடித்தளமிட்ட மூர்த்தி

ஒற்றுமைக்கு அடிநாதமாக மூத்த அண்ணனாக மூர்த்தி மற்றும் அண்ணி தனம் அந்த குடும்பத்தை தொடர்ந்து தூக்கி நிறுத்திய நிலையில், தற்போது அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கு குடும்பம் உடைவதற்கு அவர்களும் அவர்களின் சூழ்நிலைகளும் காரணமாக அமைந்துள்ளது. இதையடுத்து எந்த சூழ்நிலையிலும் குடும்ப ஒற்றுமையை காத்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்போது உடையும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தத் தொடர் எப்படி நகரும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X