நேர்மையா இருந்தா நல்லதுதான் நடக்கும்.. ஆபிசராக மாறிய கண்ணன்.. உற்சாகத்தில் குடும்பம்!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்.

4 அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களின் மனைவிகள் என இந்தத் தொடர் குடும்ப உறவின் முக்கியத்துவத்தை பேசுகிறது.

தொடரில் அண்ணன் -தம்பிகளின் ஒற்றுமையை குலைக்கும்வகையில் உறவினர்கள் காய் நகர்த்த, அதிலிருந்து மீண்டு எவ்வாறு ஒற்றுமையை அவர்கள் தக்க வைக்கிறார்கள் என்பதே கதைக்களமாக உள்ளது.

விஜய் டிவி சீரியல்கள்

விஜய் டிவி சீரியல்கள்


விஜய் டிவியின் சீரியல்கள் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், ஈரமான ரோஜாவே 2, பாரதி கண்ணம்மா என அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் பாக்கியலட்சுமி சிறப்பான மற்றும் பரபரப்பான கதைக்களங்களுடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்

தொடர்ந்து பாரதி கண்ணம்மா தொடர், தற்போதுதான் தனது இரண்டாவது சீசனை துவக்கியுள்ளது. இதனிடையே நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

அண்ணன் -தம்பிகள் பாசம்

அண்ணன் -தம்பிகள் பாசம்

4 அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களது மனைவிகள், குழந்தைகள் என சென்டிமெண்டை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தக் குடும்பத்தை தாங்கிப் பிடிக்கும் தூண்களாக மூத்த அண்ணன் மற்றும் அண்ணி, மூர்த்தி மற்றும் தனம் உள்ளனர். குடும்பத்தில் ஏற்படும் சலசலப்புகளை அவர்கள் தீர்த்து வைக்கின்றனர்.

உறவை குலைக்க சதித்திட்டங்கள்

உறவை குலைக்க சதித்திட்டங்கள்

அண்ணன் -தம்பிகளின் உறவை குலைக்கும்வகையில், சிலர் நடந்துக் கொள்ள அவர்களை எவ்வாறு அண்ணன் -தம்பிகள் ஒற்றுமையாக இருந்து சமாளிக்கிறார்கள் என்பதாக இந்தத் தொடரின் கதை நகர்ந்து வருகிறது. இதில் சில காலங்கள் கதிர் வீட்டை விட்டு வெளியேற, அவரும் குடும்பத்தினருடன் சேரும்வகையில் எப்படி உழைக்கிறார் என்பதாக கதை நகர்ந்தது.

அரசு வேலையில் கண்ணன்

அரசு வேலையில் கண்ணன்


இவர்கள் அனைவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற கடையை மற்றும் அதிலிருந்து வரும் வருமானத்தை மையமாக கொண்டு வாழ்ந்துவரும் சூழலில், இளைய தம்பி கண்ணன் மட்டும் அரசு வேலையில் அமர்ந்து அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கிறார். அவருக்கு அங்கு மேலதிகாரியுடன் ஏற்படும் பிரச்சினையும் மையமாக காட்டப்பட்டது.

கண்ணனுக்கு ப்ரமோஷன்

கண்ணனுக்கு ப்ரமோஷன்

இந்நிலையில் தற்போது கண்ணனுக்கு அவரது அலுவலகத்தில் ப்ரமோஷன் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் வந்து தன்னுடைய அண்ணி தனத்திடம் ஆசிர்வாதம் வாங்குகிறார். இதையடுத்து வீட்டிற்கு வரும் மூர்த்தி உள்ளிட்ட அண்ணன்களும் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கின்றனர். பேனர் வைத்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X