குடும்பத்தினரிடம் கர்ப்பத்தை மறைக்கும் தனம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ட்விஸ்ட்
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் காணப்படுகிறது.
சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை பேசும் இந்த தொடர், இதுபோன்ற உறவுகள் நமக்கு கிடைக்காதா என்ற ஏக்கத்தை பார்வையாளர்களுக்கு கடத்தி வருகிறது.
4 சகோதரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள், குழந்தைகள் அவர்களின் ஏற்றத்திற்கும் தாழ்விற்கும் போராடும் உறவுகள் என இந்த தொடரின் கதைக்களம் இயல்பாக அமைந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்
விஜய் டிவி தன்னுடைய நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை தொடர்களுக்கும் கொடுத்து வருகிறது. பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ஈரமான ரோஜாவே 2 என இந்த சேனலின் தொடர்கள் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகின்றன. குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது.

சகோதரப் பாசத்தை மையப்படுத்தும் தொடர்
4 சகோதரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள், குழந்தைகள், இதைசார்ந்த உறவுகள், அவர்களின் சிறப்பான உறவு மற்றும் சூழ்ச்சிகள், இதையொட்டிய பிரச்சினைகள், சோகங்கள், பிரச்சினைகள் என இந்தத் தொடர் களைகட்டி வருகிறது. தற்காலங்களில் கூட்டுக் குடும்பங்கள் வழக்கொழிந்துள்ள நிலையில், இந்தத் தொடர் அதன் நம்பிக்கையை கொடுத்து வருகிறது.

விட்டுக் கொடுக்காத சகோதரர்கள்
ஒவ்வொரு காலகட்டத்திலும் விட்டுக் கொடுக்காத மனநிலையுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் இருப்பது, ரசிகர்களுக்கு மிகச்சிறந்த புத்துணர்ச்சியை கொடுத்து வரும் நிலையில், தற்போது ஐஸ்வர்யா மற்றும் முல்லை இருவரும் கர்ப்பமாகியுள்ளது குடும்பத்தினரை மட்டுமின்றி காணும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

தனத்தின் கர்ப்பம்
குறிப்பாக கர்ப்பமாக முடியாது என்று கூறப்பட்ட முல்லை கர்ப்பமாகியுள்ளது குடும்பத்தினருக்கு சொல்லில் அடங்காத மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிலையில் கதையில் புதிய ட்விஸ்டாக மூத்த மருமகளாகவும் குடும்பத்தை தாங்கும் தூணாக கணவனுக்கு உறுதுணையாக இருக்கும் தனமும் கர்ப்பமாக உள்ளது தெரியவந்துள்ளது.

உற்சாகத்தில் மூர்த்தி
இதை மருத்துவமனையில் உறுதிப்படுத்தும் தனம், ஏற்கனவே வீட்டில் இருவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில், தானும் எப்படி மற்றவர்களிடம் சொல்வது என்று புரியாமல் பரிதவிக்கிறார். மூர்த்தியிடம் மட்டும் இந்த உண்மையை கூறுகிறார். இதனால் மூர்த்தி மிகுந்த உற்சாகம் அடையும் நிலையில், தன்னுடைய மனக்குழப்பத்தை அவரிடம் தனம் கூறுகிறார்.

தனத்தின் விபரீத முடிவு
தனத்திற்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் பட்சத்தில் தற்போது இரண்டாவது குழந்தைக்காக கர்ப்பமாக உள்ளார். ஏற்கனவே தன்னுடைய மைத்துனர்களின் மனைவிகள் இருவர் கர்ப்பமாக இருக்கும் சூழலில் அவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தனக்கு உள்ளதால், தன்னுடைய கர்ப்பத்தை கலைக்கும் விபரீத முடிவை அவர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











