ரைட்டு.. அடுத்து ஆணி பிரச்னை ரெடி.. பாண்டியன் ஸ்டோர்சில் சுவாரஸ்யம்!

சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக ரசிகர்களிடையே அதிகமான வரவேற்பை பெற்றுள்ள தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த நிகழ்ச்சி சிறப்பான எபிசோட்களுடன் டிஆர்பியில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளது.

சமீபத்தில் பாக்கியலட்சுமி தொடருடன் இணைந்து மகா சங்கமத்தில் இந்த தொடர் ஈடுபட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்

விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ், தொடர்ந்து சிறப்பான எபிசோட்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. டிஆர்பியில் முதல் 5 இடங்களில் உள்ள இந்தத் தொடர், அண்ணன் -தம்பிகளின் ஒற்றுமையை கதைக்களமாக கொண்டு அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.

கதிர் -முல்லை ஜோடி

கதிர் -முல்லை ஜோடி

இந்தத் தொடரில் கதிர் மற்றும் முல்லை தவிர்க்க முடியாத காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறி, ஹோட்டல் நடத்திவரும் நிலையில், அவர்களுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் உதவி வருகின்றனர். அவரும் வாடிக்கையாளர்களை கவர்ந்து தொடர்ந்து வெற்றிகரமாக ஹோட்டலை நடத்தி வருகிறார்.

மீனா பெயரில் ரிஜிஸ்டர்

மீனா பெயரில் ரிஜிஸ்டர்

இதனிடையே குடும்ப சூழல் காரணமாக தங்களது பூர்வீக வீட்டை விற்கும் முடிவை மூர்த்தி உள்ளிட்ட குடும்பத்தினர் மேற்கொள்கின்றனர். இந்த வீட்டை வாங்கும் மீனாவின் தந்தை, அதை தன்னுடைய மகளின் பெயரிலேயே ரிஜிஸ்டர் செய்கிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மட்டுமில்லாமல் மீனாவும் அதிர்ச்சி அடைகிறார்.

பாக்கியலட்சுமி தொடருடன் மகா சங்கமம்

பாக்கியலட்சுமி தொடருடன் மகா சங்கமம்

இதனிடையே சமீபத்தில் பாக்கியலட்சுமி குடும்பத்தினருடன் மகா சங்கமத்தில் ஈடுபடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர், கோபியின் திருமணம் குறித்து அறிந்து அவரை வைத்து செய்கின்றனர். இதனால் ராதிகாவிடம் மாட்டிக் கொண்டு திண்டாடுகிறார் கோபி. இந்நிலையில் வீடு திரும்பும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரிடையே அடுத்தடுத்த பிரச்சினைகள் எழுகின்றனர்.

ஐஸ்வர்யாவுடன் மல்லுகட்டும் மீனா

ஐஸ்வர்யாவுடன் மல்லுகட்டும் மீனா

தன்னுடைய பியூட்டி பார்லருக்காக ரெகரேஷன் பணிகளில் ஈடுபடுகிறார் ஐஸ்வர்யா. அதற்காக அவர் சுவற்றில் ஆணி அடிக்கப்போக, அதை தடுக்கிறார் மீனா. ஆணி அடிப்பதால், வீடு விரிசல் விடும் என்றும் கூறுகிறார். எப்போதுமே இவர்களுக்குள் ஏழாம் பொருத்தம் நிலவிவரும் நிலையில், ஐஸ்வர்யா அவருக்கு எதிராக பேசுகிறார்.

ஓனரம்மா என்று கலாய்த்த ஐஸ்வர்யா

ஓனரம்மா என்று கலாய்த்த ஐஸ்வர்யா

தொடர்ந்து அவரை ஓனரம்மா என்று கலாய்க்கிறார் ஐஸ்வர்யா. இதனிடையே அங்குவரும் தனம், என்ன பிரச்சினை என்று கேட்க, அங்கு நடந்ததை ஐஸ்வர்யா கூறுகிறார். இதன் ப்ரமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து இதையொட்டி என்ன மாதிரியான பிரச்சினைகள் உருவாகும் என்பது வரும் எபிசோட்களில் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X