விரைவில் நிறைவடையும் விஜய் டிவியின் பிரபல சீரியல்... ரசிகர்கள் ஏத்துப்பாங்களா?

சென்னை : விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை போலவே அதன் சீரியல்களும் மிகவும் பாப்புலர். அந்த வகையில் நடிகர் ரஞ்சித் ஹீரோவாக நடித்துவரும் செந்தூரப் பூவே தொடர் விஜய் டிவியின் முக்கிய தொடராக இருந்து வருகிறது. இந்தத் தொடர் தற்போது விரைவில் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய் டிவி நிகழ்ச்சிகள்

விஜய் டிவி நிகழ்ச்சிகள்

விஜய் டிவியின் நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் மக்களிடையே மிகவும் பாப்புலராக இருந்து வருகிறது. ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் விஜய் டிவியே அதற்கு முன்மாதிரியாக இருக்கிறது. இதன் பிக் பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளது.

சிறப்பான சீரியல்கள்

சிறப்பான சீரியல்கள்

பிரத்யேகமான நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு கொடுப்பது போலவே, சீரியல்களிலும் விஜய் டிவி முக்கியமான இடத்தை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. காலை முதல் இரவு வரை விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் ரசிகர்களின் விருப்பத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

முக்கியமான தொடர்கள்

முக்கியமான தொடர்கள்

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்கள் டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கியமாக இருந்து வருகிறது. சமீப காலங்களில் விஜய் டிவி சீரியல்கள் தனது டிஆர்பி ரேட்டிங்கை தவறவிட்டுள்ளது. இதையடுத்து சீரியல்களில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது விஜய் டிவி.

மாற்றங்களை செய்யும் விஜய் டிவி

மாற்றங்களை செய்யும் விஜய் டிவி

அந்த வகையில் பல சீரியல்களை நேரம் மாற்றம் செய்தும், புதிய சீரியல்களை கொண்டு வந்தும் ரசிகர்களை மீண்டும் கவரும்வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் முக்கியமான தொடரான செந்தூரப் பூவே விரைவில் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிறப்பான செந்தூரப் பூவே தொடர்

சிறப்பான செந்தூரப் பூவே தொடர்

விஜய் டிவியின் முக்கியமான தொடராகவே செந்தூரப் பூவே உள்ளது. இந்த தொடரின்மூலம் நடிகர் ரஞ்சித் ஹீரோவாக சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்திருந்தார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி நடித்து வருகிறார். விறுவிறுப்பான திருப்பங்களோடு சென்ற இந்தத் தொடர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சில மாதங்கள் நிறுத்தப்பட்டது.

 300 எபிசோட்களை கடந்த தொடர்

300 எபிசோட்களை கடந்த தொடர்

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்ததை அடுத்து மீண்டும் தொடர் தொடங்கப்பட்டு மீண்டும் ரசிகர்களின் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. 300 எபிசோட்களை தாண்டியுள்ள இந்தத் தொடர் விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தத் தகவல் ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X