துவங்கியது சூப்பர் சிங்கர் சீசன் 9.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக கடந்த 8 சீசன்களாக ரசிகர்களை கவர்ந்து வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது அடுத்த சீசனை துவங்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமை நிகழ்ச்சியின் 9வது சீசன் துவங்கப்பட்டு வாரயிறுதி நாட்களில் ரசிகர்களுக்கு சிறப்பான இசை அனுபவத்தை கொடுத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், பென்னி தயால், ஸ்வேதா மோகன் உள்ளிட்டவர்கள் நடுவர்களாக களமிறங்கியுள்ளனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி

தன்னுடைய சிறப்பான தொடர்கள்,நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது விஜய் டிவி. இந்த சேனலின் பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் எப்படி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பல சீசன்களை கடந்து நடைபோட்டு வருகிறதோ அப்படியே சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்டில் எப்போதும் இடம் பெற்று வருகின்றன.

சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சி

சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சி

அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சியின் ஜூனியர் ஷோ, சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து சீனியர்களுக்கான ஆடிஷன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல கட்டங்களில் பல இடங்களில் நடைபெற்றது. இதில் தேர்வானவர்களை கொண்டு தற்போது நிகழ்ச்சியின் 9வது சீசன் துவங்கப்பட்டுள்ளது.

துவங்கியது சூப்பர் சிங்கர் சீசன் 9

துவங்கியது சூப்பர் சிங்கர் சீசன் 9

இந்த நிகழ்ச்சி கடந்த 19ம் தேதி மாலை சிறப்பான துவக்கத்துடன் துவங்கியுள்ளது. சனி, ஞாயிறு என வாரயிறுதி நாட்களில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், ஸ்வேதா மோகன் மற்றும் பென்னி தயால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி

ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி

இதனிடையே கடந்த இரு தினங்களாக இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்தடுத்த வித்தியாசமான நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு கொடுத்துவரும் விஜய் டிவி, தொடர்ந்து 9வது சீசனாக இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருவது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

பிரபலமாகும் பாடகர்கள்

பிரபலமாகும் பாடகர்கள்


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பல பாடகர்கள் மற்றும் பாடகிகள் இந்திய அளவில் உள்ளனர். இந்த நிகழ்ச்சி மூலம் ஷிவாங்கி உள்ளிட்ட பிரபலமான பல பாடகர்கள் கோலிவுட்டில் காணப்படுகின்றனர். ஷிவாங்கி சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமாகி பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சினிமா வாய்ப்புகளையும் பெற்றவர். முன்னதாக சூப்பர் சிங்கர் மூலம் அவர் அதிகமான பின்னணி பாடல் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X