சிங்கிள் பொண்ணுங்க...விஜய் டிவி.,யில் வார இறுதி சிறப்பு நிகழ்ச்சி
சென்னை : வார இறுதி நாட்களில் பொழுதுபோக்குக்கு உத்தரவாதமாக பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது ஸ்டார் விஜய் டிவி. எனவே ஒவ்வொரு வார இறுதியிலும் ஏராளமான புதுமையான சிறப்பு நிகழ்ச்சி காத்திருக்கிறது.
புகழ்பெற்ற சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களைத் தொடர்ந்து வார இறுதி நாட்களில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது விஜய் டிவி. அந்த வரிசையில் புதிய நிகழ்ச்சியாக சிங்கிள் பொண்ணுங்க நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது. 11ம் தேதி ஞாயிறு மாலை 3 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

இது தான் போட்டி
இந்த சிறப்பு நிகழ்வில், எட்டு திறமையான பெண்கள், அவர்களில் மிகவும் திறமையான மற்றும் தகுதியான சிங்கிள் பெண்ணை தேர்வு செய்வர். இந்த நிகழ்வு வேடிக்கை மற்றும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக இருக்கும். ஏனெனில் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட தடைகள், அவர்கள் பெற்ற வெற்றி மற்றும் தங்கள் வாழ்க்கையில் உள்ளவர்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள்.

நடுவர்களை கவரனும்
நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான பகுதிகள் உள்ளன. அதில் பெண்கள் தங்கள் இதயத்தில் உள்ளதை பேசவும் குறிப்பிட்ட போட்டிகளை வெல்லவும் தயாராகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் தங்கள் சொந்த பாணியில் நடுவர்களை கவரும் விதமாக முன்மொழிய வேண்டும்.

நடன நிகழ்ச்சிகளும் உண்டு
சிலர் வார்த்தைகளில் வெளிப்படுத்துவர். சிலர் நடனம் அல்லது நாடகம் போன்ற செயல்கள் செய்வர். வேடிக்கையான இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் மணிமேகலை.
Recommended Video

யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள்
போட்டியாளர்கள் காவ்யா, ரித்திகா, ஜனனி அசோக்குமார், சுனிதா, திவ்யா கணேஷ், அர்ச்சனா வி.ஜே, ஸ்ரீனிதி, தர்ஷா, ஜாக்குலின். நடுவர்கள் அருண், சாம்விஷால், தீனா, பாலா, சரவணன் பி.எஸ். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் ராமர், தங்கதுரை, வி.ஜே.விஜய்.


Click it and Unblock the Notifications











