ஒரு வழியா ரெட் கார்டு டிராமா ஓவர்?.. பிரதீப் ஆண்டனிக்கு விஜய் டிவி கொடுத்த பிறந்தநாள் பரிசு!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் பிரதீப் ஆண்டனி. நடிகரும் பிக்பாஸ் போட்டியாளரான கவின் நண்பரான இவர் ஏற்கனவே கவின் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது அவரை வந்து சந்தித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

அதிதி பாலன் நடிப்பில் வெளியான அருவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான வாழ் படத்தில் ஹீரோவாக நடித்தார். கவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டாடா படத்தில் துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Vijay Tv sent a super gift to Bigg Boss fame Pradeep Antony

இயக்குநராகும் ஆர்வத்தில் பல போராட்டங்களை சந்தித்து வந்த பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது அந்த நிகழ்ச்சி களைகட்ட தொடங்கியது. சகட்டுமேனிக்கு இவர் பேசிய பேச்சுக்கள், இவரது மேனரிஸம். இவரது வினோதமான சிரிப்பு ஆரம்பத்தில் ரசிகர்களை கடுப்பாக்கினாலும் அதன் பின்னர் இவரது வெகுளி தனத்தை பார்த்து ரசிகர்கள் இவருக்கு ஆர்மி அமைக்க ஆரம்பித்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி: பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் ஓவியாவால் ட்ரெண்டான நிலையில், அவரை திடீரென வெளியே அனுப்பி வேற லெவல் மைண்ட் கேம் செய்து அந்த சீசனை நடத்தினர். அதே போல இந்த முறை பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து நிகழ்ச்சியை அதன் பின்னர் அதை வைத்தே கொண்டு சென்றனர். உமன் கார்டு பயன்படுத்தி பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாகவும் கமல்ஹாசன் சரியான ஹோஸ்ட்டாக செயல்படவில்லை என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் குவிந்தன.

Vijay Tv sent a super gift to Bigg Boss fame Pradeep Antony

ரெட் கார்டு சர்ச்சை: பிரதீப் ஆண்டனி ஒரு உமனைசர் ரேஞ்சுக்கு அவரை அசிங்கப்படுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்டு வழங்கப்பட்டது. ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்த வேண்டும் என்பதற்காக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் ரெட் கார்டுக்கு எதிரான கண்டனங்களை எழுப்பினர். அந்த பிரச்சனை பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே வரை சென்றது.

கிராண்ட் ஃபினாலேவிலும் இடமில்லை: கிராண்ட் ஃபினாலேவை முன்னிட்டு அனைத்து போட்டியாளர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றன. ஆனால், அதிலும் பிரதீப் ஆண்டனி புகைப்படம் இடம்பெறவில்லை. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறியதில் இருந்தே ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக சோஷியல் மீடியாவில் பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். கிராண்ட் ஃபினாலேவுக்கு கூட அவரை அழைக்காமல் இருந்த நிலையில், தற்போது விஜய் டிவியில் இருந்து பரிசு ஒன்று பிரதீப் ஆண்டனிக்கு வந்திருக்கிறது.

பிரதீப் ஆண்டனிக்கு பரிசு: விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஸ்டார் சார்பாக பிரதீப் ஆண்டனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளுடன் பொக்கே ஒன்றை பரிசாக அனுப்பி வைத்துள்ளனர். காலையில் தான் பிரதீப் ஆண்டனி 34 வயசாகுது காசை தவிர எல்லாத்தையும் சம்பாதித்து வைத்திருக்கிறேன் என புலம்பி இருந்தார். இந்நிலையில், தற்போது ரெட் கார்டு பஞ்சாயத்துக்கு பிறகு விஜய் டிவியில் இருந்து முதன் முதலாக வந்த வாழ்த்துக்களையும் அந்த பொக்கே போட்டோவையும் ஷேர் செய்துள்ளார். கூடிய சீக்கிரமே விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பிரதீப் ஆண்டனியையும் பார்க்க முடியும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். சிம்புவே கோபத்துடன் விஜய் டிவியை விட்டு பப்லு பிரச்சனையில் வெளியேறிய நிலையில், பல ஆண்டுகள் கழித்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையே தொகுத்து வழங்க வந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X