அப்பாவுக்கு கேன்சர்.. எல்லாம் கைமீறிப்போச்சு.. சீரியல் நடிகர் மகளின் கண்ணீர் வீடியோ!

சென்னை: சின்னத்திரை வெள்ளித்திரை என பலவற்றில் நடித்த வந்த நடிகர் நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாக அவரது மகள் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதலை கூறி வருகின்றனர்.

சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நேத்ரன். இவன் தொலைக்காட்சிகளில் சீரியலில் நடித்தது மட்டுமில்லாமல் பலத் திரைப்படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த இவர், முதன் முதலாக மருதாணி என்ற சீரியலில் அறிமுகமாகி தனது பயணத்தை தொடங்கினார். இந்த சீரியலைத் தொடர்ந்து, பல சேனல்களில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

Nethran Vijay TV

காதல் திருமணம்: நடிகர் நேத்ரன், தன்னுடன் சீரியலில் நடித்த, தீபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபிநயா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். குழந்தை பிறந்த பின் தீபா, சில வருடங்கள் திரைப்படங்களில் இருந்து விலகி இருந்தார். இதையடுத்து, குழந்தைகள் வளர்ந்த நிலையில், தீபா மீண்டும் சீரியலில் நடித்து வருகிறார். தீபா தற்போது சிங்கப்பெண்ணே, முத்தழகு உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார்.

Nethran Vijay TV

ரேவன் படத்தில்: மூத்த மகள் அபிநயா விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஜோடி நம்பர் 1 சீசன் நடன நிகழ்ச்சியில் தனது தந்தையுடன் கலந்து கொண்டு, பல பாடல்களுக்கு நடனம் ஆடி உள்ளார். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட இந்த நட்சத்திர ஜோடியின் மகள் அஞ்சனா ரேவன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த டாடா படத்தை இயக்கிய இயக்குனர் கணேஷ் பாபு இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கை மீறி போய்விட்டது: இந்நிலையில் நேத்ரன் மற்றும் தீபா நேத்ரனின் மகள் அபிநயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழத்தி உள்ளார். அதில், தன்னுடைய தந்தை கடந்த சில வாரங்களாகவே உடல் நல குறைவால் பாதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கேன்சர் இருப்பது உறுதியாகி உள்ளது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டது. ஆனாலும் தற்போது ஐசியூவில் தான் உள்ளார்.

அப்பாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: மருத்துவர்கள் அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதை நான் பல நாட்களாகவே சொல்லலாமா என நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் இப்போது சொல்கிறேன். காரணம் உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் அவரை காப்பாற்றும் என்கிற நம்பிக்கை உள்ளது. கையை மீறி போய் விட்டது. எனினும் அப்பா சீக்கிரம் குணமாக வேண்டும் என்கிற நம்பிக்கை உள்ளது என, கலங்கியபடி பேசியுள்ளார். அபிநயாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X