Nethran Death: 6 மாத போராட்டம்.. நடிகர் நேத்ரனின் உயிரை குடித்த புற்றுநோய்.. எல்லாமே கைமீறிப்போச்சு!

சென்னை: சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என பலவற்றில் நடித்து வந்த நடிகர் நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் அவரது உயிர் பிரிந்தது. இது சின்னத்திரை ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தொலைக்காட்சியில் முதன் முதலாக மருதாணி என்ற சீரியலில் அறிமுகமாகி நேத்ரன். அந்த சீரியலைத் தொடர்ந்து, பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். அப்போது, தன்னுடன் சீரியலில் நடித்த, தீபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அபிநயா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின் சீரியல்களில் நடித்து வந்த தீபா, குழந்தை பிறந்த பின் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். குழந்தைகள் வளர்ந்த பின் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்த, தீபா சிங்கப்பெண்ணே, முத்தழகு உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார்.

nethran cancer death

நடிகர் நேத்ரன்: இந்நிலையில், நடிகர் நேத்ரனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கேன்சர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டதால், அவருக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சற்று முன் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கைமீறி போய்விட்டது: கடந்த சில மாதங்களுக்கு முன் நேத்ரனின் மகள், அபிநயா, தனது இன்ஸ்கிராம் பக்கத்தில், தந்தை புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அனைத்தும், கையை மீறி போய் விட்டது. அவர் உடல் நலம் நலம் பெற அனைரும் பிரார்த்தனை செய்யும் படி கலங்கியபடி வீடியோவில் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டுமகள்கள்: நேத்ரனின் மூத்த மகள் அபிநயா விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஜோடி சீசன் 1ல் நடன நிகழ்ச்சியில் தந்தையுடன் கலந்து கொண்டார். மற்றொரு மகளான அஞ்சனா, ரேவன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை டாடா படத்தை இயக்கிய இயக்குனர் கணேஷ் பாபு இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X