அடக்கடவுளே.. சீரியல் நடிகர் கண்ணை பதம் பார்த்த சாலையில் கிடந்த கற்கள்.. ஹெல்மெட் போட்டே இப்படியா?

சென்னை: சாலையில் சிதறிக் கிடந்த கற்கள் லாரி டயரில் சிக்கி பின்னாடி பைக்கில் வந்த சீரியல் நடிகர் சக்திவேலின் கண்ணை பதம் பார்த்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

விஜய் டிவியின் அது இது எது, கலக்கப் போவது யாரு உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு பிரபலமானவர் சக்திவேல்.

விருகம்பாக்கம் ஐநாக்ஸ் தியேட்டர் வழியாக சென்றுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரது ஒரு பக்க கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது.

 Vijay Tv serial actor Sakthivel eyes injured due to roadside stones

சீரியல் நடிகர்: அது இது எது, கலக்கப் போவது யாரு மற்றும் விஜய் டிவி சீரியல்களில் நடித்து வரும் நடிகர் சக்திவேல் ஏமாளி யூடியூப் சேனலிலும் லீடு ரோலில் பர்ஃபார்ம் செய்து வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சக நடிகர்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ரீல்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வந்த இவருக்கு சமீபத்தில் சாலையில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது.

 Vijay Tv serial actor Sakthivel eyes injured due to roadside stones

சாலை விபத்து: சென்னை சாலைகளில் பல இடங்களில் கற்களும் மண்ணும் குவிந்து பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் அவர்கள் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது.

விருகம்பாக்கம் ஐநாக்ஸ் தியேட்டர் அருகே டூவீலரில் சென்றுக் கொண்டிருந்த நடிகர் சக்திவேலின் கண்ணை சாலையில் கிடந்த கற்கள் லாரி டயரில் சிக்கி பின்னாடி சென்றுக் கொண்டிருந்த அவரது கண்ணிலேயே பட அங்கேயே பரிதாபமாக மயங்கி விழுந்து விட்டார்.

சுயநினைவு இல்லை: சில நிமிடங்கள் சுய நினைவையே இழந்து மயங்கி ரோட்டில் விழுந்து கிடந்த சக்திவேலை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அவரது ஒரு கண்ணில் கல் பட்ட நிலையில், கட்டுப் போட்டிருக்கும் சக்திவேல் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவும் இன்ஸ்டாகிராம் பதிவும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

 Vijay Tv serial actor Sakthivel eyes injured due to roadside stones

ஹெல்மட் போட்டிருந்தும்: ஹெல்மட் போடலைன்னா 1000 ரூபாய் ஃபைன் போடுறாங்க.. ஆனால், நான் ஹெல்மட் போட்டிருந்தேன். ஒருவேளை ஹெல்மட் போடாமல் இருந்தால் அந்த கல் பட்டு மண்டை உடைந்து இறந்தே போயிருப்பேன்.

ஹெல்மட் இல்லைன்னா ஃபைன், சாலை விதியை கோட்டை தாண்டினால் ஃபைன் போடுறாங்க.. ஆனால், நல்ல சாலையை போடுவதில்லை, சாலையை ஒழுங்காக பராமரிப்பதில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா இதெல்லாம் கொஞ்சம் சரி பண்ணுங்க, விருகம்பாக்கத்தில் அதிகமாக கற்கல் சிதறிக் கிடக்கின்றன. அதை சரி செய்யுங்க என கோரிக்கை விடுத்துள்ளார் விபத்தினால் பாதிக்கப்பட்ட நடிகர் சக்திவேல். கடந்த மே 24ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X