மனசோ இப்ப தந்தியடிக்குது.. சூப்பராக நடந்த சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் - வைஷ்ணவி நிச்சயதார்த்தம்!
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலின் ஹீரோவாக ரசிகர்களை கவர்ந்துவரும் வெற்றி வசந்த் -பொன்னி சீரியல் நாயகி வைஷ்ணவி இருவருக்கும் நேற்றைய தினம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்கள் இருவரும் காதலிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர்.
விஜய் டிவியின் முன்னணி சீரியலான சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. டிஆர்பியில் அதிக புள்ளிகளை வாரந்தோறும் பெற்றுவரும் இந்த சீரியல் சேனலின் முதலிடத்தை தொடர்ந்து பிடித்து வருகிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு முத்து -மீனா கேரக்டர்கள் மிகப்பெரிய பங்காற்றி வருகின்றனர்.

சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். இந்தத் தொடர் அடுத்தடுத்த வாரங்களில் அதிகமான டிஆர்பிக்களை பெற்று சேனலின் முதலிடத்தில் உள்ளது. இந்த சீரியலில் முத்துவாக நடித்து வரும் வெற்றி வசந்த் மற்றும் மீனாவாக நடித்துவரும் கோமதி பிரியா இருவரும் இந்த சீரியலின் வெற்றிக்கு முதல் காரணங்களாக உள்ளனர். அவர்களின் திருமணம் மனதிற்கு பிடிக்காமல் நடந்திருந்தாலும் அடுத்தடுத்து ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டு சிறப்பான அன்னியோன்னியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முத்து -மீனா ஜோடி: வெற்றி வசந்திற்கு இது முதல் சீரியலாக இருந்தபோதிலும் தன்னுடைய இயல்பான நடிப்பு, நக்கல், நையாண்டி, பாசம், குடும்ப ஒற்றுமைக்காக செயல்படும் குணம், மனைவியின் அனைத்து செயல்பாடுகளிலும் கைகொடுக்கும் பண்பு உள்ளிட்டவை இதுபோன்ற ஒரு நபர் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்பதாக ரசிகர்களை யோசிக்க வைக்கிறது. ஆனாலும் சக மனிதர்களிடம் இருக்கும் சில குறைகளையும் இந்த கேரக்டர் வெளிப்படுத்தி வருகிறது. இதை அனுசரித்து போகும் மனைவி மீனா, குடும்பத்தையும் சிறப்பாக அரவணைத்து போகிறார். இதனால் இவர்கள் ஜோடி மிகப்பெரிய ஹிட்.
வெற்றி வசந்த் -வைஷ்ணவி நிச்சயதார்த்தம்: இதனிடையே சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய நிச்சயதார்த்தத்தை அறிவித்திருந்தார். விஜய் டிவியின் சேனலில் பொன்னி சீரியலில் நாயகியாக நடித்துவரும் வைஷ்ணவியை காதலிப்பதாக அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு க்யூட்டான வீடியோ மூலம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை பகிர்ந்த நிலையில், நேற்றைய தினம் இவர்களின் நிச்சயதார்த்தம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இதில் சக சீரியல் நடிகர்கள் பலரும் வந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இதன் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இந்த ஜோடியின் அழகு அள்ளுகிறது.

சிறப்பாக நடந்த நிச்சயதார்த்தம்: விரைவில் இவர்களின் திருமணம் மேலும் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாகவும் விரைவில் அதுகுறித்து அறிவிக்கவுள்ளதாகவும் வெற்றி வசந்த் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக யூடியூபராக ஏராளமான ரசிகர்களை கவர்ந்த வெற்றி வசந்த் தன்னுடைய முதல் சீரியலிலேயே தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை தாறுமாறாக உயர்த்தியுள்ளார். இந்நிலையில் தற்போது இவரது நிச்சயதார்த்தம் வைஷ்ணவியுடன் நடந்துள்ளது. பெரியோர்கள், உறவினர்கள், நண்பர்கள் சூழ நடந்துள்ள இந்த நிகழ்வில் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி இருவரும் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











