த்ரிஷா மட்டுமல்ல.. சின்ன நடிகையை கூட ஓப்பனா கூப்புடுறாங்க.. சீரியல் நடிகை வேதனை!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா குறித்து சேலம் மாவட்டத்தின் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு அவதூறாக பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. அவரது பேச்சுக்கு திரைத்துறையினரும் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திரிஷாக்கு பொங்கும் ரசிகர்களே இங்க கொஞ்சம் வாங்க என்று நடிகை ஒருவர் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசிய வீடியோவை நெட்டிசன்கள் இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு, அண்மையில் அளித்த பேட்டியில் நடிகை த்ரிஷா குறித்தும் மற்ற நடிகைகள் குறித்தும் மோசமாக பேசி இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இயக்குநர் சேரன்,குஷ்பு, கஸ்தூரி என திரைப்பிரபலங்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக உள்ளது. தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இனிமேல் சொல்ல வேண்டிய ஒன்றும் இல்லை அனைத்தையும் சட்டப்படி செய்வேன் என பதிவிட்டு இருந்தார்.
ஓபனா கேட்குறாங்க: இப்படி த்ரிஷா விவகாரம் ஒரு பக்கம் புயலை கிளப்பிக் கொண்டு இருக்கும் நிலையில், விஜய் டிவி சீரியல் நடிகை சினிமாவில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு சின்ன கேரக்டர் ரோலாக இருந்தாலும் கூட அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகேவா என்று ஓப்பனாக கேட்கிறார்கள். எங்கு போனாலும் இதே கேள்வியைத்தான் முதலில் கேட்கிறார்கள். இதனால் ஒரு கட்டத்தில் நான் ஆடிசனுக்கே போக வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டேன். அதுமட்டுமில்லாமல் ப்ரோபைலில் கூட அட்ஜஸ்ட்மென்ட்க்கு எஸ், நோ என்று ஆப்ஷனல் எல்லாம் வைத்து இருக்கிறார்கள். நான் நோ என்று அனுப்பிய பிறகும், அந்த ப்ரோபைலை கூட படித்துப் பார்க்காமல் கால் செய்து அட்ஜஸ்ட்மென்ட் ஓகேவா என்று கேட்கிறார்கள். இந்த அளவிற்கு மோசமான பல சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன் என்று வேதனையாக கூறியிருக்கிறார்.
திரிஷாக்கு பொங்கும் ரசிகர்களே: நடிகை ரேஷ்மா பிரசாத்தின் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்களில் ஒருவர், திரிஷாக்கு பொங்கும் ரசிகர்களே இங்க கொஞ்சம் வாங்க.. தனியா ஒரு ஆப்ஷன் வெச்சி படுக்க வரியானு கேட்குற நிலமைலதான் அந்த இடம் இருக்கு..இது பெரிய டைரக்டர் உட்பட பல பெரிய நடிகைகளுக்கும் தெரிஞ்சதே திரிஷா அவர்களையும் சேத்துதான்.. தான் இந்த இண்டஸ்ட்ரில இருக்கனும்னு ஒரே காரணத்துக்காக என்று பதிவிட்டுள்ளார்.
சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்: நடிகை ரேஷ்மா பிரசாத் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும், சக்திவேல் என்ற சீரியலில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த சீரியலில் குறுகிய நாட்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. கோயம்புத்தூரை சேர்ந்த ரேஷ்மா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பாரதி கண்ணம்மா 2 தொடரில் நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு நல்ல பெயரும் வாங்கி தந்தது. மேலும், இவர் நடித்த நான் பிழை நீ மழலை என்ற ஷார்ட் பிலிம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.


Click it and Unblock the Notifications










