கர்ப்பான நேரத்தில் இது தேவையா… சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ் !
சென்னை : விஜய் டிவியின் பகல் நிலவு சீரியல் நடிகை சமீரா ஷெரீஃப் என்ஜாமி எஞ்சாமி பாடலுக்கு நடனமாடி உள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி பலரது லைக்குகளை பெற்றுள்ளது.
சில ரசிகர்கள் கர்ப்பான நேரத்தில் எதுக்கு இந்த ஆட்டம் என்று கேட்டு வருகின்றனர்.

கர்ப்பம்
சமீரா ஷெரீஃப் மற்றும் ஷையது அன்வர் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கடந்த வாரம் இவர்கள் இருவரும் வெளியிட்ட ஒரு வீடியோவில், நாங்கள் இனி கணவன் மனைவி இல்லை என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தனர். நாங்கள் இனி பெற்றோராக உள்ளதாக கூறி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தனர்.

சக்தி கதாபாத்திரத்தில்
விஜய் டிவி ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் சக்தி மற்றும் பிரபாகரன் என்ற கதாபாத்திரத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும், நடிகை சமீரா ரெக்கை கட்டிய மனசு சீரியலில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனங்களை வென்றார்.
நடனமாடினார்
இந்நிலையில், இணையத்தில் மிகவும் வைரலாகி அனைவரின் பாராட்டுக்களை பெற்று வரும் எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு அழகாக நடனமாடி உள்ளார் நடிகை சமீரா ஷெரீஃப். இந்த வீடியோ பலரின் லைக்குகளை பெற்றிருந்தாலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இவ்வளவு ஆட்டம் தேவையான என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
Recommended Video

பலரது லைக்குகள்
ரௌடி பேபி புகழ் தீயின் குரலில் பாடகர் அறிவுடன் இணைந்து எஞ்சாய் எஞ்சாமி என்ற பாடலை பாடி உள்ளனர். மார்ச் 7-ம் தேதி வெளியான இந்தப் பாடலை இதுவரை149 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பதோடு 3 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களை குவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











