விஜய் டிவியில் இன்று முதல் புதிய நேரத்தில் தொடர்கள் ஒளிபரப்பாகும் !

சென்னை : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சில தொடர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

vijay tv serial time changed announcement

விஜய் தொலைக்காட்சிக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. ரியாலிட் ஷோக்கள் என்றாலும் காமெடி நிகழ்ச்சி என்றாலும் அதை ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி கொடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளது.

அண்மையில் முடிவடைந்த குக்வித் கோமாளி சீசன் 2 சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் அனைவரையும் சிரிக்கவைத்து மனங்களை வென்றது.இதில் இடம் பெற்ற புகழ், அஸ்வின், பாலா, பவித்ரா லட்சுமி, தஷ்ஷா குப்தா, ஷிவாங்கி என அனைவருக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து மிகவும் பிரபலமாகி விட்டனர்.

இந்நிலையில் விஜய் டிவியில் மக்கள் மனம் கவர்ந்த பல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. காற்றுக்கென்ன வேலி, செந்தூரப்பூவே, நாம் இருவர் நமக்கு இருவர் நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த தொடர்கள் அனைத்தும் இல்லத் தரசிகளின் மனம் கவர்ந்த தொடர்களாகும்.

விஜய்தொலைக்காட்சியில் இன்று முதல் புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் தீபக் மற்றும் நக்ஷத்திரா நடித்துள்ளனர். காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் இன்று முதல் 7.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த தொடரின் வரவால் சில தொடர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. காற்றுக்கென்ன வேலி இனி 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என்றும் செந்தூரப்பூவே 6.30 மணிக்கும், நாம் இருவர் நமக்கு இருவர் இரவு 7.00 மணிக்கும் ஒளிபரப்பாகும் என்றும் விஜய் டிவி தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X