சூப்பர் சிங்கர் ஜூனியர் 10.. பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரஜினி கையெழுத்து போட்ட கிடாரை வெல்லப்போவது யார்?
சென்னை: விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் ரசிகர்களின் பேவரைட்டாக உள்ள நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி 10வது சீசனில் சிறப்பாக நடைபோட்டு வருகிறது. நடுவர்களாக மனோ, இமான், சித்ரா உளிளட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிரடியாக இணைந்து மாஸ் காட்டி வருகின்றனர்.
நிகழ்ச்சி துவங்கி சில வாரங்களே ஆன நிலையில் அடுத்தடுத்து ஜூனியர்கள் மிகச்சிறப்பான கவனத்தை தங்களது பாடும் திறமைகளால் பெற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் துவக்கத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்ட பிரமோக்களில் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு கதை இருப்பதாக உருக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 ஷோ: விஜய் டிவியின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது சேனலில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தன்னுடைய 8வது சீசனில் வெற்றிநடைபோட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்தடுத்த வித்தியாசமான நிகழ்ச்சிகளை இந்த சேனல் களமிறக்கி வருகிறது. அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீனியர், ஜூனியர் என அடுத்தடுத்த சீசன்களை தொடர்ந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தன்னுடைய 10வது சீசனை கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கி அதிரடி காட்டி வருகிறது.
சிறப்பான நடுவர்கள்: இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள் மனோ, சித்ரா மற்றும் இசையமைப்பாளர் இமான் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று நிகழ்ச்சியின் பாடகர்களை சிறப்பாக ஊக்குவித்தும் குறைகளை சுட்டிக் காட்டியும் வருகின்றனர். நிகழ்ச்சி துவங்கப்பட்டு சில வாரங்களே ஆகியுள்ளது. நிகழ்ச்சிக்கு முன்னதாக அடுத்தடுத்த பிரமோஷன்களால் நிகழ்ச்சிக்கு மிகச்சிறப்பான கவனத்தை விஜய் டிவி கொடுத்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு கதை உள்ளதாக உருக்கம் காட்டியது. ராணிப்பேட்டை நஸ்ரின்,சேலம் ரேணுகா, கோவை பிரனேஷ் சென்னை சாராஸ்ருதி என அடுத்தடுத்த போட்டியாளர்களை அறிமுகம் செய்தது.
ரஜினிகாந்த் பிறந்தநாள் சிறப்பு ரவுண்ட்: இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர்கள் சந்தித்த சவால்களையும் சுட்டிக் காட்டியது. அடுத்தடுத்த சுற்றுகளில் இந்த நிகழ்ச்சி களைகட்டி வரும் நிலையில் வரும் 12ம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரவுண்ட் நடக்கவுள்ளது. இதில் ரஜினியின் கேரியர் பெஸ்ட் பாடல்களை தேர்ந்தெடுத்து சுட்டிகள் பாடவுள்ளனர். இதனிடையே இதன் அடுத்தடுத்த பிரமோக்களையும் சேனல் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
அடுத்தடுத்த பிரமோக்கள்: இதனிடையே தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் இந்த சுற்றில் வெற்றிபெறும் ஜூனியருக்கு ரஜினிகாந்த் தானே கையெழுத்திட்ட கிடார் பரிசாக கொடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சி மேலும் சுவாரஸ்யமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் இந்த பிரமோவில் ரஜினியின் என்னம்மா கண்ணு உள்ளிட்ட பாடல்களை தேர்ந்தெடுத்து ஜூனியர்கள் பாடவுள்ளதும் தெரியவந்துள்ளது. பாடல்கள் என்றாலே ஏராளமான ரசிகர்களின் கொண்டாட்டமாக அமையும் நிலையில் சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாள் சுற்றாக வரும் வாரம் நிகழ்ச்சி அமையவுள்ளது.


Click it and Unblock the Notifications











