நடிகையாக அறிமுகமாகும் பாடகி ராஜலட்சுமி..எந்த படத்தில் தெரியுமா?
சென்னை : பாடகி ராஜலட்சுமி கணபதி பாலமுருகன் இயக்கத்தில் உருவாக உள்ள லைசென்ஸ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாக உள்ளார்
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரை மட்டுமல்லாமல் உலக தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் பரிச்சியமானவர்கள் ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் தம்பதியினர்.
இவர்கள் இருவரும் பின்னணி பாடகர்களாக சினிமாவில் பல பாடல்களை பாடி வருகின்றர். அதுமட்டுமில்லாமல், வெவ்வேறு நாடுகளுக்கு சென்று பாடல்கள் பாடி வரும் இவர்கள் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகின்றனர்.

சின்ன மச்சான்..செவத்த மச்சான்
செந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவரும் இணைந்து பாடிய பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் வரும் சின்ன மச்சான்..செவத்த மச்சான்.. பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த பாடலை அடுத்து புஷ்பா படத்தில் "ஏ சாமி... வாயா சாமி" பாடலுக்கு ஏற்ற இறக்கத்தோடு பாடி மூலைமுடுக்கெல்லாம் பிரபலமானார் ராஜலட்சுமி. புஷ்பா படம் வெளியாகி பல மாதங்கள் ஆனாலும் இன்று வரை பாடல் பலரை ஆட்டம் போடவைத்துள்ளது.

பாடகி ராஜலட்சுமி நடிகையாகிறார்
இந்நிலையில், பாடகி ராஜலட்சுமி கணபதி பாலமுருகன் இயக்கத்தில் உருவாக உள்ள லைசென்ஸ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாக உள்ளார். நார்மல் பிலிம் பேக்டரி சார்பாக இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளார்.

விரைவில் படப்பிடிப்பு
இப்படத்தில் ராதாரவி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக நடிகரான விஜய் பாரத் நடிக்கிறார். மேலும் இதில் மதுரை ரிஷி, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஒப்பந்தமாகி உள்ளனர். லைசென்ஸ் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

பாடலுக்கு முக்கியத்துவம்
தந்தை மகள் பாசப் பின்னணியுடன் பெண்களின் பாதுகாப்பு தன்மையை பற்றி விவாதிக்கும் பரபரப்பான கதையம்சத்தை கொண்ட இப்படத்தில், பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தையும் கணபதி பாலமுருகன் கவனித்துக் கொள்கிறார். இவர் கவுண்டமணி நடித்து வெற்றிகரமாக ஓடிய "எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது"என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











