Super Singer 11: சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 பாடகர் சரணுக்கு.. யுவன் சங்கர் ராஜா கொடுத்த பரிசு!

சென்னை: சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11ல் இசை ஞானி இளையாராஜாவை கொண்டாடும் விதமாக 'Celebrating இசை' என்ற தலைப்பில் போட்டியாளர்கள் இந்த வாரம் பாடல்களைப் பாடினார்கள். கடந்த வாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசு இசைஞானிக்கு பாராட்டு விழா நடத்தியது. இந்நிலையில் இசைஞானியைக் கொண்டாடும் விதமாக விஜய் தொலைக்காட்சி சார்பில், Celebrating இசை என்ற தலைப்பில் பாடலகளைப் பாடினார்கள். இந்த சிறப்பு நிகழ்ச்சியில் இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கங்கை அமரன் என இசைஞானி இளையராஜாவின் குடும்பத்தினர் கலந்து கொண்டார்கள்.

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின், 11 வது சீசன் வெகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் இசைக்கடவுள் இசை ஞானி இளையாராஜாவை கொண்டாடும் விதமாக 'Celebrating இசை' என்ற தலைப்பில் அடுத்த மூன்று எபிசோடுகள் நடைபெறவுள்ளது. முழுக்க முழுக்க இளையராஜா பாடல்களை பங்கேற்பாளர்கள் பாடவுள்ளனர்.

Vijay TV Super Singer Senior Season 11 Ilayaraja Celebration Round Yuvan Gives Surprise Gift To Saran

யுவன் கொடுத்த பரிசு: இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் கங்கை அமரன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு பாடகர்களை ஊக்குவித்தனர். அச்சு அசல் இளையராஜாவின் பிரதி போலவே பாடும் பாடகர் சரணுக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இளையராஜாவின் புகைப்படம் பதித்த டீசர்டை பரிசளித்து வாழ்த்தியது மிக நெகிழ்வான தருணமாக அமைந்தது. போட்டியாளர் சரணுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இளையராஜாவின் உருவப்படம் அச்சிடப்பட்ட டீ-சர்ட்டை அன்புப் பரிசாக வழங்கி மகிழ்வித்தார்.

Vijay TV Super Singer Senior Season 11 Ilayaraja Celebration Round Yuvan Gives Surprise Gift To Saran

ரசிகர்கள் ஆர்வம்: தமிழக மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட இளையராஜாவின் இசையை கொண்டாடும் வகையிலும், அவரின் தீவிரமான ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. வழக்கத்தை விடவும் இந்த வாரம் நிகழ்ச்சி பெரிய அளவில் களைகட்டும் என ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். பல இளம் திறமையாளர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி, இந்த முறையும் பல அதிரடி புதுமைகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. சூப்பர சிங்கர் சீனியர் 11 நிகழ்ச்சியை சனி, ஞாயிறு கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியிலும், ஜியோ ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டுகளியுங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X