கொண்டாட்டமாக நடந்த சூப்பர் சிங்கர் ஃபேமஸ் பிரியா ஜெர்சன் திருமணம்.. நீண்ட நாள் காதலரை மணந்தார்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக தொடர்ந்து பல சீசன்களை கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. சீனியர், ஜூனியர் என அடுத்தடுத்த சீசன்களை கொடுத்துவரும் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான போட்டியாளர்கள் பெரிய திரையில் வாய்ப்புகளை பெற்று கலக்கி வருகின்றனர்.
விஜய் டிவியின் மற்ற நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து பல ஆண்டுகளாக போட்டியிட்டு முன்னணியில் இருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் வெற்றி பெற்று, சினிமாவில் பாடும் வாய்ப்புகளை மட்டுமில்லாமல் இசை நிகழ்ச்சிகளிலும் பாடும் வாய்ப்புகளை இவர்கள் பெற்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த கடந்த 2022ம் ஆண்டில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரன்னர் அப்பாக வந்து அதிரடி வெற்றி பெற்றவர் பிரியா ஜெர்சன்.

சூப்பர் சிங்கர் ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக தொடர்ந்து பல ஆண்டுகளை கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி/ இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான பாடும் திறமைகள் வெளிவந்து சினிமாவில் பாடும் வாய்ப்பையும் தொடர்ந்து பெற்று வருகின்றன. சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சீனியர் என அடுத்தடுத்த சீசன்களில் பாடகர்களின் திறமை வெளிப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்டங்களில் போட்டிகளை நடத்தி சுவாரசியமாக்கி வருகிறது சேனல். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்கள் சினிமாவில் பாடும் வாய்ப்புகளை மட்டுமில்லாமல் யுவன் சங்கர் ராஜா, ஏஆர் ரஹ்மான் போன்றவர்களின் இசை நிகழ்ச்சிகளில் பாடும் வாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர்.
பாடகி பிரியா ஜெர்சன்: அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீனியர் 9 நிகழ்ச்சியில் கடந்த 2022ம் ஆண்டில் பங்கேற்று தன்னுடைய தெத்துப்பல் சிரிப்பு, சுருள் முடி மூலமாகவும் சிறப்பான பாடும் திறமை மூலமாகவும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் பிரியா ஜெர்சன். அந்த சீசனில், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், உன்னி கிருஷ்ணன், ஸ்வேதா மோகன் போன்ற நடுவர்கள் இடம்பெற்றிருந்த நிலையில். பிரியா ஜெர்சன் முதல் ரன்னர் அப்பாக வெற்றி பெற்று பத்து லட்சம் ரூபாயை தட்டி சென்றார். இந்நிலையில் பிரியா ஜெர்சனுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
பிரியா ஜெர்சன் -சார்லி ஜாய் திருமணம்: தன்னுடைய நீண்ட நாள் காதலர் சார்லி ஜாயை மிகப் பெரிய கொண்டாட்டத்திற்கு இடையில் பிரியா ஜெர்சன் திருமணம் செய்து முடித்துள்ளார்.இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்த நிலையில் தற்போது திருமணமும் நடந்து முடிந்துள்ளது. இதனிடையே தன்னுடைய திருமண வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த பிரபலங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். வெள்ளை நிற கவுனில் பிரியா ஜெர்சன் தேவதையாக தன்னுடைய காதல் கணவர் கையை பிடித்து வந்தது அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.
குவியும் வாழ்த்துக்கள்: கேரளாவில் பிறந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற பிரியா ஜெர்சன், மேலை நாடுகளுக்கெல்லாம் சென்று இசைப் பயிற்சி பெற்றவர் என்பது கூடுதல் தகவல். இதனிடையே தற்போது பிரியா -சார்லி திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் அவருடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உடன் பயணித்தவர்களும் கலந்துக் கொண்டு நேரில் மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











