Just In
- 2 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 2 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 4 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 5 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாய்ப்பிருந்தால் வந்து போ மகளே.. மறைந்த விஜே சித்ராவுக்கு விஜய் டிவியின் அஞ்சலி.. உருக வைக்கும் ஷோ!
சென்னை: மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு விஜய் டிவியின் டிரிபியூட் நிகழ்ச்சியாக வரும் ஞாயிற்றுக் கிழமை ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
கடந்த டிசம்பர் 9ம் தேதி நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் சித்ரா.
சித்ராவின் இறுதி சடங்கில் ஏகப்பட்ட பிரபலங்களும், விஜய் டிவி நடிகர்களும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
நெஞ்சில் குத்தியது யார்? சித்ரா மரணத்தில் அவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம்.. பிரபல நடிகர் பகீர்!

மரணத்தில் சந்தேகம்
சைக்காலஜி மாணவியான சித்ரா தற்கொலை செய்து கொள்வதை நம்பவில்லை என அவருடன் பணியாற்றிய சக நடிகைகளும், நெருங்கிய நண்பர்களும் சந்தேகத்தை கிளப்பினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என வந்ததும் தற்கொலைக்கு அவரை தூண்டியது யார் என்கிற கேள்வி எழுந்தது.

ஹேமந்த் சரியில்லை
சித்ராவை பதிவுத் திருமணம் செய்து கொண்ட ஹேமந்த் ரவி சரியில்லை என்று சித்ராவின் தோழிகள் வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தனர். சித்ராவின் தாயாரும் ஹேமந்த் தான் தனது மகளை கொன்று விட்டான் என்றதும் போலீசார் ஹேமந்திடம் 6 நாட்களுக்கு மேல் நடத்திய விசாரணையின் முடிவில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டார்.

கடைசி நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா, ஸ்டார்ட் மியூசிக் ஷோவில் கடைசியாக கலந்து கொண்டார். ஷோ முடிந்து அதிகாலை 2.30 மணிக்கு கிளம்பி ஹோட்டலுக்கு சென்ற சித்ரா அங்கே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த திரைத் துறையையும் சின்னத்திரை கலைஞர்களையும் அதிர்ச்சியடைய செய்தது.

வைரலாகும் புரமோ
வரும் ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணிக்கு சித்ராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விஜய் டிவி அந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. அது தொடர்பான புரமோ வீடியோ ஒன்று தற்போது விஜய் டிவியில் வெளியாகி வைரலாகி வருகிறது. சித்ரா தனது அப்பாவுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சிகள், நடந்து செல்லும் காட்சிகள் என அவரது சிரித்த முகம் ரசிகர்களை கண்ணீர் கடலில் மூழ்க வைத்து வருகிறது.
— Vijay Television (@vijaytelevision) December 18, 2020 |
வார்த்தை விளையாட்டு
மக்கள் தொலைக்காட்சியில் பணியாற்றிய சித்ரா, சொல்லியடி நிகழ்ச்சியில் வார்த்தை விளையாட்டுகளை ரசிகர்களுடன் விளையாடுவார். இந்த புரமோவில், பாவனா பாலகிருஷ்ணன் சித்ராவிடம் சொல்லும் ஆங்கில பெயர்களுக்கு அழகான தமிழ் பெயர்களை சித்ரா சொல்வதே சிறப்பான ஒன்று தான்.

சிலம்பம் சுற்றும் சித்ரா
தேன் தமிழ் பேச்சு மட்டுமின்றி துணிச்சலான சிலம்ப வீச்சையும் கற்றுத் தேர்ந்தவர் சித்ரா. சித்ரா சிலம்பம் சுற்றுவதை பார்த்து, யாஷிகா ஆனந்த், மகத் எல்லாம் வாய் பிளக்கும் புரமோ தற்போது வெளியாகி உள்ளது. சித்ராவின் காட்சிகளை தொகுத்து ஒரு டிரிபியூட் வீடியோவாக விஜய் டிவி வரும் ஞாயிற்றுக் கிழமை முல்லையின் ரசிகர்களுக்கு ஒளிபரப்ப காத்திருக்கிறது. "வாய்ப்பிருந்தால் வந்து போ மகளே" என வரும் கடைசி வசனம், ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி வருகிறது.