பிக் பாஸ் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த விஜய் டிவி.. அடுத்த அப்டேட் எப்போ தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 தொடர்பாக சர்ப்ரைஸான அறிவிப்பை தற்போது விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்குமா? தொடங்காதா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்த நிலையில், கமல்ஹாசனின் அதிரடியான இரண்டு புரமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அடுத்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என விஜய் டிவி அறிவித்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பினாலும், சண்டைகளை உருவாக்கினாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கும் இருக்கும் கிரேஸ் ஒரு போதும் குறைந்ததாக தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்களும், அதில் யார் கலந்து கொள்கிறார்கள், என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர்களாகவே இருப்பது தான் அந்த நிகழ்ச்சியின் வெற்றி.

இந்த முறையும்

இந்த முறையும்

இந்தியன் 2 இருக்கிறது, தலைவன் இருக்கின்றான் படத்தை ஆரம்பிக்கப் போகிறார், தேர்தல் வரப் போகிறது அரசியல் கட்சியை பலப்படுத்த வேண்டாமா? நிச்சயம் இந்த முறை கமல் தொகுத்து வழங்க வர மாட்டார் என பல குரல்கள் எழுந்த நிலையில், உங்களில் இருந்தே ஒலிக்கும் குரல் என கமல்ஹாசன் 4வது சீசன் புரமோவுக்கும் செம ஸ்டைலாக வந்து சொன்னபடி கேக்க சொன்னது பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எவனென்று நினைத்தாய்!

ரசிகர்கள் அப்செட்

ரசிகர்கள் அப்செட்

விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலேயே, உறுதியான போட்டியாளர்கள் குறித்த தகவல்களும், அவர்கள் சொகுசு ஹோட்டலில் குவாரண்டைனில் இருப்பது தொடர்பான புகைப்படங்களும் கசிந்து வரும் நிலையில், நிகழ்ச்சி தொடங்க இன்னும் 2 வாரங்களே உள்ளது. இன்னமும் ஏன் அதிகாரப்பூர்வ அப்டேட்டை விஜய் டிவி வழங்கவில்லை என ரசிகர்கள் அப்செட் ஆகி இருந்தனர்.

அதிரடி அப்டேட்

அதிரடி அப்டேட்

இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ அடுத்த அப்டேட் வெளியாகும் என்ற ட்வீட் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அடுத்த புரமோவா? இல்லை போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பா? என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

எதுக்கு இவ்ளோ அவசரம்

எதுக்கு இவ்ளோ அவசரம்

விஜய் டிவி வெளியிட்டுள்ள பிக் பாஸ் அப்டேட் குறித்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் ஆர்வத்தையும் கிண்டல்களையும் வழக்கம் போல பதிவிட்டு வருகின்றனர். பிரண்ட்ஸ் பட வடிவேல் காமெடி புகைப்படத்தை போட்டு, பொறுமையா.. இன்னும் பொறுமையா.. எதுக்கு இவ்ளோ அவசரம் என கேட்டு கலாய்த்துள்ளனர்.

2 ஆன்ட்டி 2 அங்கிள்

2 ஆன்ட்டி 2 அங்கிள்

முன்னதாக போட்டியாளர்களை கண்டு பிடியுங்கள் என விஜய் டிவி பிக் பாஸ் குறித்த ட்வீட்டை போட்டு இருந்தது. அதனை ட்ரோல் செய்யும் விதமாக, ஒரு பாட்டி, ஒரு தாத்தா, 2 ஆன்ட்டி, 2 ஆங்கிள், 2 கிளுகிளுப்பு, 2 கலகலப்பு, 1 குசுகுசுப்பு, 1 நசநசப்பு என விஜய்காந்த் மீமை போட்டு தெறிக்கவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X