விஜய் டிவி.,யில் தமிழும் சரஸ்வதியும்...ஆரம்பமாகும் தேதி இது தான்

சென்னை : தனித்துவமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஸ்டார் விஜய் எப்போதும் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. ஸ்டார் விஜய் சேனலில் ஏராளமான நிகழ்ச்சிகள் உள்ளன. அவை பிரதான நேர மற்றும் வார இறுதி நாட்களின் பார்வையாளர்கள் தரவரிசையில் தொடர்ந்து முன்னணி வகிக்கிறது.

பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி, ராஜா ராணி போன்ற தொடர்கள் முன்னணியில் உள்ள சில முக்கிய சீரியல்கள். மெகா-சீரியல்களின் வரிசையில், ஸ்டார் விஜய் மேலும் சேர்க்கிறது.

தமிழும் சரஸ்வதியும் கதை:

தமிழும் சரஸ்வதியும் கதை:

சரஸ்வதி, வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் ஒரு ஆர்வமுள்ள பெண். ஆனால் அவள் எப்போதும் தான் ஒரு பன்னிரெண்டாம் வகுப்பை கூட முடிக்க முடியாமல் போனது குறித்து, சரியாகப் படிக்காததற்காக தனது தந்தையிடமிருந்து வரும் தொடர்ச்சியான விமர்சனங்களிலிருந்து தப்பிக்க அவள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள்.

தமிழ் என்ற தமிழ்செல்வன் மிகவும் பொறுப்பான மற்றும் மரியாதைக்குரியவன். தமிழ் தனது கல்வியை நிறுத்தி, சூழ்நிலைகளால் சிறிய வயதிலேயே குடும்பத்தொழிலை எடுத்துக் கொண்டவர்.அவர் படிக்காதவர் என்பதால் அவரது தாயார் கோதை அவருக்கு ஒரு படித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவுசெய்கிறார்.

சரஸ்வதியாக நக்ஷத்ரா

சரஸ்வதியாக நக்ஷத்ரா

சரஸ்வதியாக நக்ஷத்ரா நடிக்கிறார். அவர் பல்வேறு சேனல்களுக்காக ஏராளமான சீரியல்களைச் செய்துள்ளார். மேலும் அவர் As I'm suffering from Kadhal என்ற ஹாட் ஸ்டார் வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

தமிழாக தீபக்

தமிழாக தீபக்

தமிழாக தீபக். தீபக், ஸ்டார் விஜய் சேனலின் செல்லப்பிள்ளை தான். மீண்டும் திரும்பியுள்ளார். ஜோடி நம்பர் 1, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக சேனலுடன் மிக நீண்ட கால உறவைக் கொண்டிருந்தார். முன்னணி சீரியல்களிலும் அவர் பல பாத்திரங்களைச் செய்துள்ளார்.

யாரெல்லாம் நடிக்கிறார்கள்

யாரெல்லாம் நடிக்கிறார்கள்

கோதை - மீரா கிருஷ்ணன் (தமிழின்தாய்), நடேசனாக ராமச்சந்திரன் (தமிழின் அப்பா), சொக்கலிங்கமாக பிரபு (சரஸ்வதியின்அப்பா), சந்திரலேகாவாக ரேகா (சரஸ்வதியின் அம்மா), வசுந்தராவாக தர்ஷனா, மேலும் பலர் நடித்துள்ளனர்.

எப்போ ஒளிபரப்பாகிறது

எப்போ ஒளிபரப்பாகிறது

தமிழும் சரஸ்வதியும் தொடரை இயக்கியுள்ளவர் எஸ். குமரன். தொலைக்காட்சி துறையின் மிகவும் பிரபலமான இயக்குனர். இந்த சீரியலை விகடன் விஸ்டா தயாரிக்கிறது. ஸ்டார் விஜய்யில் ஜூலை 12, 2021 அன்று திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X