விஜய் டிவி பப்பு கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் இணைந்த மங்காத்தா நடிகர்!

சென்னை : விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஜாலியாக தொகுத்து வழங்கி வருபவர் விஜே பப்பு.

தற்பொழுது அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஹீரோவாகவும் ஒப்பந்தமாகி இருக்கும் இவர் வணக்கம் தமிழா மூவிஸ் தயாரிப்பில் பெயரிடப்படாத திரைப்படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் நிலையில் இதில் பிரபல காமெடி நடிகர் பிரேம்ஜி அமரன் பாடல் ஒன்றை பாடி உள்ளார்.

விஜே பப்பு

விஜே பப்பு

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி இப்பொழுது விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டுள்ளார் விஜே பப்பு. கலக்கப்போவது யாரு உட்பட பல ஷோக்களை தொகுத்து வழங்கி பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள இவருக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இருக்க குக் வித் கோமாளி இரண்டு பாகங்களிலும் கோமாளியாக வந்து அசத்தி உள்ளார்.

வணக்கம் தமிழா மூவிஸ்

வணக்கம் தமிழா மூவிஸ்

தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சின்னத்தம்பி உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்து நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் பப்பு வெள்ளித்திரையிலும் கால் தடத்தை பதித்து அடுத்தடுத்த இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் ஒரு திரைப்படத்தை வணக்கம் தமிழா மூவிஸ் தயாரிக்கிறது.

சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில்

சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில்

வணக்கம் தமிழா சாதிக் இயக்கும் இந்த திரைப்படத்தில் விஜே பப்புவுடன் இணைந்து கன்னிமாடம் ஸ்ரீ கார்த்திக் மற்றும் அஜய் வாண்டையார் ஆகியோரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். டார்க் ஃபேண்டசி ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

கவிஞர் எம். சக்திவேல்

கவிஞர் எம். சக்திவேல்

இந்த நிலையில் நடிகர்,பாடகர், இசையமைப்பாளர் என பன்முகங்களைக் கொண்டுள்ள நடிகர் பிரேம்ஜி அமரன் இதில் பாடல் ஒன்றை பாடியுள்ளார் . கவிஞர் எம். சக்திவேல் எழுதியிருக்கும் இந்தப் பாடல் பதிவு முடிவு பெற்றதையடுத்து தற்பொழுது படக்குழு அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் பாடல் அனைவரையும் கவரும் வகையில் மிகச் சிறப்பாக வந்துள்ளது எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X