முதல் முதல் பார்த்தேன்.. தலைகீழானேன்... விஜே பிரியங்காவின் ரீல் வீடியோ !
சென்னை : விஜய் டிவி பிரபலம் விஜே பிரியங்கா இன்ஸ்டாவில் கலாக்கலான வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் க்யூட்டான ரியாக்ஷனை வெளியிட்டு கலக்கி உள்ளார் பிரியங்கா.
இந்த வீடியோ அனைவரும் ரசிக்கப்பட்டு , வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

முதலிடம்
விஜய் தொலைக்காட்சிகளில் நடைபெறும் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்து ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு அதிக பார்வையாளர்கள் உண்டு. இந்த ஷோக்களின் மூலம் விஜய் டிவி ஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது

பிரபல தொகுப்பாளினி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளினி பிரியங்கா மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் கலகலப்பை புகுத்தி அதை வேறவெவல் டிரெண்டிங் ஆக்கி விடுவார் தொகுப்பாளினி பிரியங்காவின் ஸ்டைல்.

வீட்டில் வெட்டியாக
கொரோனாவால் மொத்த திரைத்துறையும் முடங்கி உள்ளது. இதனால் ஷூட்டிங்கில் நிக்கக்கூட நேரமில்லாமல் படு பிஸியாக இருந்த, நடிகர் நடிகைகள் வீட்டில் என்ன செய்வதுனு தெரியாமல், சமைப்பது, உடற்பயிற்சி செய்வது என தங்களது பொழுதை கழித்து வருகின்றனர்.
க்யூட் ரியாக்ஷன்
அந்த வகையில் பிரியங்கா தனது இஸ்டாகிராம் பக்கத்தில் சுல்தான் படத்தில் வரும் முதல் முதல் பார்த்தேன்...தலைகீழானேன் என்ற பாடலுக்கு ரீல் போட்டுள்ளார். இந்த வீடியோவில் க்யூட்டாக ரியாக்ஷன் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை அனைவரும் ரசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











