நடு வீட்டில் வந்து உட்கார்ந்த புகழ்.. நீதானே புகழ் வேணும்னு சொன்ன என செம கலாய்.. அடுத்த சரவெடி ரெடி!

சென்னை: கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கிய நிலையில் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் சத்தமே இல்லாமல் நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ், குக் வித் கோமாளி என ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எண்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சிகளை அள்ளித்தரும் விஜய் டிவி அடுத்த ஒரு புதுமையான ஷோவை ரசிகர்களுக்காக தர தயாராகி விட்டது.

சீரியல் நடிகைகளுடன் காமெடி நடிகர்கள் சேர்ந்து கலக்க உள்ள காமெடி ராஜா கலக்கல் ராணியின் அசத்தல் புரமோக்கள் வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்து வருகின்றன.

ஆரம்பிக்கலாங்களா

ஆரம்பிக்கலாங்களா

மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ஆரம்பம் ஆக தொடங்கி உள்ளன. விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளை தொடர்ந்து ரசிகர்களை சிரிக்க வைக்க இன்னொரு புதிய நிகழ்ச்சி உருவாகி உள்ளது. அதன் புரமோக்கள் தான் தற்போது சோஷியல் மீடியா டிரெண்டே!

நடுவீட்டில் புகழ்

நடுவீட்டில் புகழ்

சின்னத்திரை நடிகை புகழ் வேண்டும் புகழ் வேண்டும் என புலம்பித் தவிக்க நடு வீட்டில் குக் வித் கோமாளி பிரபலம் புகழே வந்து உட்கார்ந்து இருக்கும் படியான அசத்தல் புரமோ மீண்டும் குக் வித் கோமாளி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

காமெடி ராஜா கலக்கல் ராணி

காமெடி ராஜா கலக்கல் ராணி

காமெடி ராஜா கலக்கல் ராணி என்கிற அட்டகாசமான டைட்டிலில் உருவாகி உள்ள இந்த புதிய காமெடி ஷோவில் சீரியல் நடிகைகளும் காமெடி நடிகர்களும் கலந்து கொண்டு களைகட்ட உள்ளனர். ஜூன் 1 முதல் ஞாயிறு தோறும் மதியம் 1.30 மணிக்கு விஜய் டிவியில் மீண்டும் காமெடி அட்டகாசங்கள் அரங்கேற காத்திருக்கின்றன.

குக் வித் கோமாளி தீபா

குக் வித் கோமாளி தீபா

இன்னொரு புரமோவில் குக் வித் கோமாளி தீபா பிக் பாஸ் அர்ச்சனா மாதிரி அன்பு.. அன்பு என புலம்ப.. இப்படியே கேட்டுட்டு இருந்தா அன்பு வராது.. ஆம்புலன்ஸ் தான் வரும் என அதிரடி காட்டும் புரமோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இன்னும் யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்க போறாங்கன்னு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் புரமோக்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

Recommended Video

Anbudan Kushi serialல இருந்து வெளியேறியதுக்கு இதுதான் காரணம் Reshma Opens Up
ஸ்ட்ரெஸ் பஸ்டர்

ஸ்ட்ரெஸ் பஸ்டர்

இந்த கொரோனா காலத்தில் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மக்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது இது போன்ற நகைச்சுவை தொடர்கள் தான். கிட்டத்தட்ட 5 மாதங்களாக மக்களை சிரிக்க வைத்த குக் வித் கோமாளி பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். சீரியலில் அழ வைத்த நடிகைகளும் மக்களை இனி சிரிக்க வைக்க போகின்றனர்.

பிக் பாஸ் எப்போ

பிக் பாஸ் எப்போ

மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கி புதிய புதிய நிகழ்ச்சிகள் தயாராகி வரும் நிலையில், அடுத்த பிக் பாஸ் சீசன் எப்போது ஆரம்பம் ஆகும் என்கிற கேள்வியையும் ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் விஜய் டிவியிடம் எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அக்டோபர் மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X