Bigg Boss tamil 7: விஷ்ணுவை தள்ளி விட்டது யாரு.. அடுத்த பஞ்சாயத்தில் கமல்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் நடைபோட்டு வருகிறது. கடந்த 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் நிகழ்ச்சி துவங்கியது.
இன்றைய தினம் 27வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் நுழைந்தனர்.
இதனிடையே கடந்த வாரங்களில் 2 பேர் எலிமினேட் ஆன நிலையில் எழுத்தாளர் பவா செல்லதுரை தானே விரும்பி வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தற்போது 7வது சீசனில் நடைபோட்டுவரும் இந்த நிகழ்ச்சி கடந்த 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கப்பட்டது. நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட நிலையில் முதல் வாரத்திலேயே அனன்யா குறைவான வாக்குகளை பெற்று போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அடுத்தடுத்த வெளியேற்றம்: தொடர்ந்து அடுத்த சில தினங்களிலேயே பவா செல்லதுரை போட்டியிலிருந்து தானே விரும்பி வெளியேறிய நிலையில், கடந்த வாரத்தில் விஜய் வர்மா எலிமினேட் ஆனார். இதனிடையே இந்த வாரம் யார் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். மேலும் இந்த வாரம் வைல்ட் கார்ட் சுற்றும் உள்ளதால் பரபரப்பான எபிசோட்களை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
2 எலிமினேஷன்: இந்நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் யுகேந்திரன் மற்றும் வினுஷாதான் அவர்கள் என்ற உறுதிப்பட்ட தகவலும் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த வாரம் வைல்ட் கார்ட் மூலம் போட்டியில் நுழையவுள்ள போட்டியாளர்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கானா பாலா, நடிகை அர்ச்சனா உள்ளிட்ட 5 போட்டியாளர்கள் இந்த வைல்ட் கார்ட் சுற்றின்மூலம் நிகழ்ச்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஷ்ணு குற்றச்சாட்டு: கடந்த சில தினங்களாக அடுத்தடுத்த பல டாஸ்க்குகளை போட்டியாளர்கள் எதிர்கொண்டனர். இதில் சார்ஜிங் சுற்றில் போட்டியாளர்கள் பரபரப்பாக ஈடுபட்டிருந்த நிலையில், அனைவரும் அதை எதிர்கொள்ள ஓடினர். அப்போது விஷ்ணு கீழே தவறி விழுந்தார். தன்னை அக்ஷயாதான் தள்ளி விட்டதாகவும் வேண்டுமானால் வீடியோ ஆதாரத்தை எடுத்து பார்க்கலாம் என்றும் விஷ்ணு குற்றம் சாட்டியிருந்தார். இதனால் போட்டியாளர்கள் இரு தரப்பாக பிரிந்து சண்டையிட்டுக் கொண்டதையும் பார்க்க முடிந்தது.

பஞ்சாயத்தை கையிலெடுத்த கமல்: இந்நிலையில் இந்தப் பஞ்சாயத்தை தற்போது நிகழ்ச்சியின் ஆங்கர் கமல்ஹாசன் கையில் எடுத்துள்ளார். விஷ்ணுவை தள்ளி விட்டது யார் என அவர் போட்டியாளர்களிடம் கேட்டார். தொடர்ந்து யுகேந்திரனிடமும் தனிப்பட்ட முறையில் அவர் பார்த்தாரா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த யுகேந்திரன், தனக்கு தெரிந்தவரையில் தள்ளிவிட்டதாக தெரியவில்லை என்று கூறினார். விஷ்ணு சத்தியம் செய்ய கேட்டநிலையில் ஏன் அதை அக்ஷயா செய்யவில்லை என்றும் கமல் கேள்வி எழுப்பினார். விஷ்ணுவின் சந்தேகத்தை வீடியோவை பார்த்து தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் கூறுவதாக தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











