SK படத்தை தரைமட்டமாக்கிய விஜய்க்கு நெருக்கமான பிரபலம்.. ஆனா விதை போட்டதே விஜய் தான்னு தெரியாம போச்சே

சென்னை: கடந்த பொங்கலுக்கு நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படமும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பராசக்தி படமும் வெளியாவதாக இருந்தது. இதில் விஜய் படத்திற்கான சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கலால் விஜய் படம் வெளியாகவில்லை. இப்படி இருக்கும்போது பராசக்தி படம் மட்டும் வெளியாகியது. பராசக்தி படம் வெளியாவதற்கு முன்னர் இருந்தே, நடிகர் விஜய்யின் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் தொடங்கி அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், பராசக்தி படக்குழுவினர் என பலரையும் மோசமாக விமர்சித்து வந்தனர். இது படம் வெளியான பின்னர் மேலும் அதிகரித்தது. இதை படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா விஜய் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார்.

இப்படி இருக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா சமீபத்திய கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி படம் குறித்து பேசினார்.

Vijay TVK Aadhav Arjuna Attacks Sivakarthikeyan Parasakthi Movie

அதாவது, " ஒரு படம் ரிலீஸ் ஆனது. அந்த படம் பெயர் என்ன என்று கூட்டத்தை நோக்கி கேட்கிறார். உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் பராசக்தி என்று கூறுகிறார்கள். மறந்துட்டேன் என்று சொல்லிவிட்டு பேச்சைத் தொடர்கிறார். பராசக்தி.. அது வந்ததும் தெரியல, போனதும் தெரியல. அந்த அளவுக்கு மக்கள் தூக்கி போட்டுட்டாங்க. உருட்டலாம் என்று நினைத்தார்கள். அந்த படத்தை வைத்து ஓட்டு வாங்கி விடலாம் என்று நினைத்தார்கள்.

அட்டாக் மோட்: மக்கள் மனதை பாருங்க, ஜன நாயகன் படம் வெளியாகவில்லை அல்லவா, பராசக்தி படம் ஒரு நாள் கூட ஓடக்கூடாது என்று மக்கள் தியேட்டர் பக்கமே போகவில்லை. இந்த ரெட் ஜெயின்ட் கம்பெனி யாருது? உதயநிதி அமைச்சராவதற்கு முன்னர் அதன் ஓனராக இருந்தார். அவர் அமைச்சர் ஆனதும் அதன் ஓனர் பெயரை மாற்றுகிறார்களாம். அதாவது இன்பநிதி என்று மாற்றினார்கள். இன்பநிதி யார்? உதயநிதியின் மகன். இன்ப நிதியின் தாத்தா யார்? தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Vijay TVK Aadhav Arjuna Attacks Sivakarthikeyan Parasakthi Movie

இணையவாசிகள் பதிலடி: இஸ்லாமிய தோழர்களே, கிறிஸ்தவ தோழர்களே, தலித் சகோதரர்களே, இன்ப நிதியின் தாத்தா ஸ்டாலின் அவர்களின் படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால் உண்மையாக அரசியல் செய்யக்கூடிய எங்களின் தலைவர் ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆகாததால் ஏற்பட்ட நஷ்டத்தை தைரியமாக எதிர்கொண்டு வருகிறார்" என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் சிவகார்த்திகேயன் ரசிகர்களை கொஞ்சம் அப்செட் ஆக்கி உள்ளது. அதே நேரத்தில் ரெட் ஜெயின்ட் நிறுவனம் தொடங்கப்பட்டு எடுக்கப்பட்ட முதல் படமான குருவி படத்தின் கதாநாயகன் நடிகர் விஜய் தான் என்று இணையவாசிகள் பலரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X