விஜய்யின் தவெக மாநாட்டிற்கு செல்வோருக்கு எச்சரிக்கை.. அஜித் ரசிகர்கள் இதைச்செய்தாலும் செய்வார்கள்!

சென்னை: தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக இருப்பவர் நடிகர் விஜய். மிகப்பெரிய ஓபனிங் கொண்ட கதாநாயகன், அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் என விஜய்யின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் ரொம்பவும் பெருசு. இப்படியான நிலையில் அவர் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இணையத்தில் வேகமாக பரவி வரும் வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி முழுநேர அரசியல்வாதியாக செயல்படவுள்ளார் என தான் கட்சி தொடங்கிய முதல் நாளே அறிவித்தார். விஜய் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார் என்ற தகவல்கள் ஏற்கனவே இணையத்திலும் மக்கள் மத்தியிலும் பேச்சுகள் அடிபட்டு வந்தாலும், அவர் சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகப்போகின்றேன் என்ற அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. குறிப்பாக அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

vijay tvk ajithkumar

அரசியல்: விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர் விஜய்யோ அல்லது அவரது கட்சியினரோ நேரடியாக மக்களைச் சென்று சந்தித்து அவர்களின் பிரச்னைக்காக குரல் எழுப்பவில்லை எனவும் ட்விட்டரில்தான் அறிக்கைகளை வெளியிட்டு அரசியல் செய்து வருகின்றார் என விமர்சனம் முன் வைக்கப்பட்டது. ஆனால் இந்த விமர்சனத்திற்கு முன்னரே அவர் தூத்துக்குடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்தது மட்டும் இல்லாமல், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

vijay tvk ajithkumar

விஜய் - அஜித்: விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னர் இருந்து அரசியல் தளத்தில் அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றார். அதேநேரத்தில் சினிமா களமும் அவருக்கு அப்படிதான் இருந்துள்ளது. சினிமா களத்தில் விஜய் பல விமர்சனங்களை எதிர்கொள்ள விஜய் ஒரு முக்கிய காரணம் எனக் கூறினாலும், அது தகும். இன்றைக்கு 50 வயதில் விஜய்க்கு இருக்கும் பக்குவம் முன்பு இல்லை. அதனால் அவருக்கும் நடிகர் அஜித்திற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்தது.

vijay tvk ajithkumar

எச்சரிக்கை: இருவரும் தங்களது படங்களில் மாறிமாறி ஒருவரை ஒருவர் மறைமுகமாக சாடிப்பேசும் வசனங்களைப் பேசியுள்ளனர். பாடல்களிலும் இதுபோல மோதல்போக்கு இருந்து வந்தது. இவர்களின் மோதல் ரசிகர்களிடையே இப்போதுவரை உள்ளது. அஜித் ரசிகர்கள் தாங்கள் ஒன்றுகூடும் இடங்களில், " அஜித்தே கடவுளே" எனக் கத்தி வருகின்றனர். இந்நிலையில் இணையத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகின்றது.

vijay tvk ajithkumar

அதில் விஜய்யின் தவெக மாநாட்டிற்குச் செல்வோர் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கூட்ட நெரிசலில் யாராவது காலை தெரியாமல் மிதித்துவிட்டால், நாம் இயல்பாகச் செய்வதைப்போல், தொட்டு வணங்கும்போது கடவுளே என மட்டும் கூறிவிடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்வதை அங்கு வந்திருக்கும் அஜித் ரசிகர்கள் பார்த்துவிட்டால், அஜித்தே எனக் கத்திவிடுவார்கள். அதன் பின்னர் என்ன நடக்கின்றதோ அது வரலாறாக மாறிவிடும்" என அந்த வீடியோவில் ஒருவர் பேசுகின்றார். இந்த வீடியோவைப் பார்த்த சில அஜித் ரசிகர்கள் செய்தாலும் செய்வார்கள் என பேசி வருகின்றனர்.

vijay tvk ajithkumar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X