TVK Maanadu: நேத்து நைட்டே இத்தனை லட்சம் பேர் வந்துட்டாங்களே.. மதுரை மாநாட்டிலும் ஹவுஸ்ஃபுல் போர்டு

சென்னை: 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய் அடுத்தடுத்த ஆண்டுகளில் தனது கட்சியின் இரண்டு மாநாடுகளை நடத்துகிறார். ஏற்கனவே கடந்த ஆண்டே அதாவது கட்சி தொடங்கிய 2024ஆம் ஆண்டே விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டினை நடத்திய விஜய், இன்று மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டினை நடத்துகிறார். அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதைக் குறிவைத்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் இன்று தான் அதாவது ஆகஸ்ட் 21ஆம் தேதி தான் மாநாடு என்றாலும், விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்றே அதாவது ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் முகாமிட்டு விட்டார்கள். குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வந்த விஜய் ரசிகர்கள் மாநாட்டு திடலுக்கு செல்லும் வழியிலேயே இரவு தங்கி கொண்டார்கள். இன்று அதிகாலை முதலே மாநாட்டுத் திடலை நோக்கி தொண்டர்களும் ரசிகர்களும் படை எடுத்துக் கொண்டு உள்ளார்கள்.

Vijay TVK Madurai Maanadu Ground Filled With Million Vijay Fans And TVK Members Early
Photo Credit:

சுமார் 500 ஏக்கருக்கு மேல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இதுவரை ஆயிரக்கணக்கான வாகனங்களில் குவிந்துள்ளார்கள். மாநாட்டு நிகழ்ச்சி நிரல் மாலைதான் என்றாலும், இப்போதே லட்சக்கணக்கான தவெகவினர் மாநாட்டுத் திடலை நிரப்பி விட்டார்கள். சொல்லப்போனால் ஹவுஸ்ஃபுல் போர்டு மட்டும் தான் வைக்கவில்லை. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரள்வார்கள் என்று ஏற்கனவே தவெக தரப்பில் திட்டமிட்டப்பட்டிருந்ததால்தால், சுமார் ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை நாற்காலிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஹவுஸ்ஃபுல் போர்டு: மொத்தம் 5 ஒப்பந்ததாரர்களிடம் நாற்காலிகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால், நான்கு பேர் திடீரென ஜகா வாங்க, நாற்காலிகள் அதன் பின்னர் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே விக்கிரவாண்டி மாநாட்டில் லட்சக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் குழுமியதால் இம்முறை சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை எதிர்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது என கூறப்படுகிறது. இதுவரை சுமார் 3 லட்சம் தொண்டர்கள் மாநாட்டு திடலில் குழுமி உள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது. மேலும் தொண்டர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். ஹவுஸ்ஃபுல் போர்டு மட்டும்தான் வைக்கவில்லை.

Vijay TVK Madurai Maanadu Ground Filled With Million Vijay Fans And TVK Members Early
Photo Credit:

அடுத்த பிளான்: இந்த மாநாட்டிற்குப் பிறகு விஜய் அடுத்தடுத்து, தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்தை தொடங்கிவிடுவார் என கூறப்படுகிறது. மாநாட்டில் அவரது பேச்சு, தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த முறை போல் இல்லாமல், இந்த முறை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு ஏற்ற வகையில் இரவு வரை மாநாட்டை நடத்தவும் அவர் முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டிற்கு ஆண்கள், பெண்கள் என லட்சக்கணக்கனா தொண்டர்கள் குழிமியுள்ளதால் இந்த மாநாடு குறித்த பேச்சுக்கள் இந்தியா முழுவதும், பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X