Baakiyalakshmi: மீண்டும் கீழிறங்கிய பாக்கியலட்சுமி தொடர்.. என்னது 3வது இடமா?
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக மாஸ் காட்டி வந்தது பாக்கியலட்சுமி தொடர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த தொடர் டிஆர்பியில் கீழிறங்கியுள்ளது.
முதலிடத்தில் தொடர்ந்து சிறகடிக்க ஆசை தொடர், முன்னிலை வகித்து வருகிறது. முத்து, மீனா என லீட் கேரக்டர்கள் மற்றும் அவர்களின் பர்பார்மென்ஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தொடரில் சுந்தர்ராஜன் உள்ளிட்ட ஒருசிலரை தவிர்த்து அதிகமான புதுமுகங்கள் நடித்து வருகின்றனர். ஆனாலும் இந்தத் தொடர் சைலண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.

டிஆர்பியில் சறுக்கி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியில் நிகழ்ச்சிகளுக்கு இணையாக சீரியல்களும் அதிகமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சன் டிவி சீரியல்கள் தொடர்ந்து டிஆர்பியில் முதலிடங்களை பெற்றுவரும் நிலையில் அந்த சேனலுக்கு இணையாக அடுத்தடுத்த சீரியல்களை களமிறக்கி இரண்டாவது இடத்தில் விஜய் டிவி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இந்த சேனலில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த பல தொடர்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன.
விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக பாக்கியலட்சுமி தொடர்ந்து பல மாதங்களாக இருந்து வந்தது. உலகம் அறியாமல், தன்னுடைய குடும்பமே உலகம் என நம்பி வாழ்ந்துவரும் பாக்கியாவை, தன்னுடைய கல்லூரி காதலியான ராதிகாவை திருமணம் செய்யும் முடிவுடன் விவாகரத்து செய்ய நினைக்கிறார் கோபி. அவரது காதல் குறித்து தெரியவரும் பாக்கியா, 25 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த தன்னுடைய வாழ்க்கையை கேலிக்குறியாக்கிய அவருக்கு தானே முன்வந்து விவாகரத்து அளிக்கிறார்.
மேலும் கோபி வீட்டை விட்டு வெளியேறவும் காரணமாகிறார். இதையே சாக்காக கொண்டு கோபி, ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்கிறார். இதனால் ஏற்படும் குழப்பங்கள், வீட்டை பராமரிக்கும் பொறுப்பு தலையில் விழ, அதை எதிர்கொள்ளும் பாக்கியாவின் அடுத்தடுத்த சவால்கள் என தொடர், தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்த டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று, முதலிடத்தில் இருந்தது.

ஆனால் கடந்த சில வாரங்களாக இந்தத் தொடர் டிஆர்பியில் பின்தங்கியுள்ளது. கடந்த இரு வாரங்களாக சேனலின் சிறகடிக்க ஆசை தொடரிடம் தோற்று, இரண்டாவது இடத்தில் பின்தங்கிய பாக்கியலட்சுமி தொடர், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இரண்டாவது இடத்திற்கு தாவியதால், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ரசிகர்களின் பேவரிட் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது, அதன் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிரபல நடிகர் மற்றும் இயக்குநரான சுந்தரராஜன் உள்ளிட்ட சிலரை தவிர்த்து, முற்றிலும் புதிய முகங்களை கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை. இந்தத் தொடர்தான் தற்போது முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இதனிடையே, கடந்த சில வாரங்களாக, புதுமனை புகுவிழா, மீண்டும் இணைந்த அண்ணன் -தம்பிகள் என மாஸ் காட்டிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இரண்டாவது இடத்தை எட்டிப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











