Baakiyalakshmi: பாக்கியாவுடன் கேரள பயணமா.. தடுக்கப் பாய்ந்த கோபி.. பதிலடி கொடுத்த ஈஸ்வரி!

சென்னை: இனியாவுடன் கல்லூரி ப்ராஜெக்ட்டிற்காக கேரளாவிற்கு ரோட் ட்ரிப் செல்ல கோபி திட்டமிடுகிறார். ஆனால் அவரால் செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது.

ராதிகாவின் மகள் மயூ, பெரிய மனுஷியான நிலையில் அதற்கான விழாவிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனால் இனியாவுடன் ரேட் ட்ரிப்பை கேன்சல் செய்கிறார் கோபி.

Vijay TVs Baakiyalakshmi serial new episde makes everyone interesting

இதனால் அதிகமான அப்செட்டிற்கு உள்ளாகினார் இனியா. இந்த நேரத்தில் கைக்கொடுக்கிறார் பாக்கியா. தன்னுடைய மாமியார் ஈஸ்வரியையும் சேர்த்துக் கொண்டு இந்த ரோட் ட்ரிப்பிற்கு அவர் தயாராகிறார்.

பாக்கியா -இனியா ரோட் ட்ரிப்பை கேன்சல் செய்ய சண்டையிடும் கோபி: இனியா மற்றும் பாக்கியா இருவரும் ஒரே கல்லூரியில் இணைந்துள்ளனர். இனியா விஸ்காம் படிப்பில் சேர்ந்துள்ள நிலையில், அவருக்கு கல்லூரியில் கேரளா வரையில் ரோட் ட்ரிப் செல்ல ப்ராஜெக்ட் வேலை கொடுக்கப்படுகிறது. இதற்காக தன்னுடைய தந்தை கோபியுடன் செல்ல திட்டமிடுகிறார் இனியா. கோபியும் மகிழ்ச்சியுடன் ஓகே சொல்ல, உற்சாகத்துடன் தன்னுடைய ப்ராஜெக்ட்டிற்காக தயாராகிறார் இனியா. மறுநாள் பயணத்தை துவங்குவதற்கான அனைத்து பேக்கிங்கையும் செய்து முடித்துவிட்டு மிகுந்த ஆவலுடன் இனியா காணப்படுகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episde makes everyone interesting

இந்நிலையில் ராதிகாவின் மகள் மயூ, பெரிய மனுஷியாகிறார். இதனால் ராதிகா, அவரது அம்மா, கோபி என அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். மலேசியா ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டு, ராதிகாவின் அண்ணன், மயூவை பார்க்க வருகிறார். அன்று மாலை மயூவிற்கு ஃபங்ஷன் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த பங்ஷன் காரணமாக இனியாவுடன் ரோட் ட்ரிப் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார் கோபி. ராதிகாவும் அவர் கண்டிப்பாக நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று எச்சரிக்கிறார்.

இதனால் இனியாவின் ரோட் ட்ரிப்பை கேன்சல் செய்கிறார் கோபி. இதனால் மிகுந்த வருத்தத்துடன் புலம்பித் தள்ளுகிறார் இனியா. கல்லூரியில் தனது முதல் அசைன்மெண்ட்டே இப்படி ஆனால், தன்னுடைய பெயர் கெடும் என்றும், அப்பா கூறுவது போல இந்த பயணத்தை கேன்சல் செய்ய முடியாது என்றும், தன்னுடைய டிபார்ட்மெண்ட் ஹெட்டிடம் தான் பர்மிஷன் வாங்கிவிட்டதாகவும் இனியா அழுகிறார். தன்னுடைய மகளின் அழுகையை பார்க்க முடியாமல் பரிதவிக்கிறார் பாக்கியா.

Vijay TVs Baakiyalakshmi serial new episde makes everyone interesting

இதையடுத்து தானே இனியாவுடன் ரோட் ட்ரிப்பிற்கு செல்வதாக கூறுகிறார். டிரைவர் ஒருவரும் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனாலும் இந்தப் பயணம் சேஃப்டியாக இருக்காது என்பதால், மாமியார் ஈஸ்வரியையும் உடன் அழைத்து செல்ல திட்டமிடுகிறார். செல்வியும் இந்த ட்ரிப்பில் உடன் சேர்ந்துக் கொள்கிறார். இந்நிலையில், இந்த பயணம் குறித்து கேள்விப்படும் கோபி, பெண்கள் மட்டும் செல்லும் இந்த ட்ரிப் எப்படி பாதுகாப்பாக இருக்கும் என்று அனைவரிடமும் சண்டையிடுகிறார்.

தன்னுடைய அம்மா எப்போதும் சிந்தித்து செயல்படுபவர், அவரும் இந்த ட்ரிப்பிற்கு ஓகே சொன்னதை கேள்வி கேட்கிறார். ஒரு வாரம் கழித்து இந்த ட்ரிப்பை வைத்துக் கொள்ளலாம் என இனியாவிடமும் கூறுகிறார். பாக்கியா, ஈஸ்வரி மற்றும் இனியாவுடன் இந்தப் பயணத்தை மேற்கொள்ளக்கூடாது என்று சண்டையிடுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் கடுப்பாகின்றனர். கோபி, தன்னுடைய அம்மாவிடமும் இதுகுறித்து கேள்வி எழுப்ப, அவர் தான் அந்த ட்ரிப்பை கேன்சல் செய்வதாக ஈஸ்வரி கூறுகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episde makes everyone interesting

ஆனால், இனியாவை கோபி உடனடியாக ரோட் ட்ரிப்பிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இதனால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறும் கோபி, பாக்கியாவை திட்டிவிட்டு அவர்தான் அனைத்திற்கும் காரணம் என்று பழிபோட்டுவிட்டு அங்கிருந்து செல்கிறார். உடனே ராதிகா, மயூ பங்ஷனுக்கு ஈஸ்வரியை அழைக்க வேண்டும் என்று அடுத்த பந்தை கோபியிடம் எறிகிறார். இப்போதுதான் அவர்களை திட்டிவிட்டு வந்தோம் மீண்டும் எப்படி அவர்களிடம் செல்வது என்று ஒன்றும் புரியாமல் திகைக்கிறார் கோபி.

ஆனாலும் ராதிகாவிடம் மிதி படுவதை காட்டிலும் தன்னுடைய அம்மாவிடமே திட்டு வாங்கிக்கொள்ளலாம் என நினைத்து, மீண்டும் சென்று மயூ பங்ஷக்கு ஈஸ்வரி மற்றும் தன்னுடைய அப்பாவை அழைக்கிறார். ஈஸ்வரி கண்டிப்பாக யாரோ பெற்ற பெண்ணின் பங்ஷனுக்கு தான் வரமாட்டேன் என்று ஆத்திரத்துடன் கூறுகிறார். ஆனால் கோபி சென்றவுடன் தன்னுடைய கணவன் மற்றும் பாக்கியாவின் அறிவுரையை ஏற்கும் ஈஸ்வரி, மயூ பங்ஷனுக்கு செல்ல சம்மதம் சொல்வதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X