Baakiyalakshmi serial: பாக்கியாவின் அடுத்த முயற்சி.. கேன்டீன் கான்டிராக்டை குலைக்கும் கோபி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய தினம் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
சமீபத்தில் ஜெனிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், செழியன் மருத்துவமனையில் அவருடன் இருக்க விரும்புகிறார். ஆனால் தன்னுடன்தான் இருக்க வேண்டும் என்று மாலினி அவரை மிரட்டுகிறார்.

இதனிடையே, புதிய கேன்டீன் கான்டிராக்டிற்கான முயற்சியில் பாக்கியா ஈடுபடுகிறார். பழனிச்சாமியின் மூலம் இந்த கான்டிராக்டிற்காக அவர் முயற்சி மேற்கொள்கிறார்.
பாக்கியாவின் புதிய கேன்டீன் கான்டிராக்டை குலைக்கும் கோபி: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து பரபரப்பான தருணங்களை இயக்குநர் தொடர்ந்து கொடுத்து வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் ஒளிபரப்பாகும் எபிசோடும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது. ஜெனிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், அவருடன் இருக்க செழியன் விரும்புகிறார். முன்னதாக ஜெனிக்கு பிரசவ வலி வந்த போது, அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார். இதுபோல வலி வரும் என்று தெரிந்திருந்தால் தான் குழந்தை பெற சம்மதித்திருக்க மாட்டேன் என்றும் கூறுகிறார்.

அவர் தன்னுடைய குழந்தையை பார்த்து உற்சாகமடைந்த நிலையில், இரவு முழுவதும் ஜெனி மற்றும் குழந்தையுடன் இருக்க விரும்புகிறார். ஆனால் மாலினி உடனடியாக செழியன் தன்னை பார்க்க வரவில்லை என்றால் கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மிரட்டுகிறார். இதனால் உடனடியாக மாலினியை பார்க்க அலறி அடித்துக் கொண்டு செல்லும் செழியனை அங்கேயே தங்க வைக்கிறார்.

மறுநாள் காலையில் மருத்துவமனைக்கு வரும் செழியனை, ஆத்திரத்துடன் திட்டித் தீர்க்கிறார் பாக்கியா. அவருக்கு செழியன்மீது சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், வேலை காரணமாகத்தான் இரவு நேரங்களில் தான் அலுவலகத்தில் தங்குவதாக அவர் காரணம் கூறுகிறார். அப்படிப்பட்ட வேலையே தேவையில்லை என்றும், விட்டுவிடவும் பாக்கியா கூறுகிறார். இதனால், மாலினியை சமாளிக்க வழி தெரியாமலும், அம்மாவிடம் மாட்டிக் கொண்டும் செழியன் தவிக்கிறார்.
இதனிடையே, ராதிகாவின் அலுவலகத்தில் கேன்டீன் கான்டிராக்ட் பறிபோனதால், அடுத்தக்கட்ட நடவடிக்கையில் பாக்கியா ஈடுபடுகிறார். பழனிச்சாமியின் சிபாரிசில் மற்றொரு அலுவலகத்தில் கேன்டீன் கான்டிராக்டை பெறும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால் அந்த இடத்தில் பாக்கியாவை பார்க்கும் கோபி, அவரது அந்த முயற்சிக்கு ஆப்பு வைக்கிறார். கோபியின் நண்பரின் அலுவலகம் என்பதால், இடையில் நுழைந்து பாக்கியாவிற்கு கான்டிராக்ட் கிடைக்காமல் செய்கிறார்.
தனக்கு கான்டிராக்ட் கிடைக்காததற்கு காரணம் தெரியாமல் பாக்கியா முழிக்க, அங்குவரும் கோபி, இந்த உலகத்தில் எந்த மூலைக்கு சென்று அவர், முன்னேற நினைத்தாலும் தான் அங்கே வந்து அதை குலைப்பேன் என்று சவால் விடுகிறார். இதனால் செய்வதறியாமல் பாக்கியா அதிர்ச்சியாக அவரை பார்க்கிறார். சமீபத்தில் ஜெனியின் குழந்தை பிறப்பின்மூலம் தன்னுடைய குடும்பத்தினருடன் அதிகமான ஒட்டுதலை காட்டியிருந்தார் கோபி. ஆனாலும் பாக்கியாவின் முன்னேற்றம் என்று வரும்போது வில்லனாக மாறிவிடுகிறார்.
இதனிடையே இன்றைய எபிசோடியில் அமிர்தாவிடம் அடுத்த குழந்தை குறித்த தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்கிறார் எழில். முன்னதாக அமிர்தா, இதுகுறித்து பேசியபோது, அடுத்த குழந்தை வேண்டாம் என்று உறுதியாக கூறிய எழிலுக்கு, ஜெனி -செழியன் குழந்தையை பார்த்தவுடன், தானும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை வருகிறது. குழந்தையின் கையை பிடித்தபோது தனக்கு மெய்சிலிர்த்ததாக அவர் உற்சாகத்துடன் கூறுகிறார். அமிர்தாவை தேடி கணேஷ், சுற்றிவரும் நிலையில், அமிர்தா -எழிலின் நெருக்கம் மேலும் அதிகரிப்பதாக காட்டப்படுகிறது.


Click it and Unblock the Notifications











