Baakiyalakshmi: பழனிச்சாமி அம்மாவையும் விட்டு வைக்காத கோபி.. இதே பொழப்பா போச்சு!
சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடரான பாக்கியலட்சுமி தொடர்ந்து இந்த வாரமும் Urban categoryயில் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தொடரின் கடந்த சில எபிசோட்களில் பழனிச்சாமி மற்றும் பாக்கியாவின் உறவு குறித்து தவறாக நினைத்து பாக்கியாவிடம் சண்டை போடுகிறார் கோபி.

சாலையில் அவர் பாக்கியாவை வழிமறித்து சண்டையிட, இதுகுறித்து விசாரிக்கும் போலீசாரிடம் கோபி குறித்து புகார் தெரிவிக்கிறார் பாக்கியா.
பழனிச்சாமி அம்மாவிடம் பாக்கியா-பழனிச்சாமி குறித்து புகார் சொல்லும் கோபி: விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி இந்த வாரமும் சேனலின் டிஆர்பியில் முன்னிலை வகித்து வருவதோடு, வழக்கம்போல அனைத்து சீரியல்களையும் பின்னுக்குத் தள்ளி Urban categoryயில் முதலிடத்தை பிடித்துள்ளது. கோபி, பாக்கியா, ராதிகா என முக்கியமான மூன்று கேரக்டர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய சொந்தங்களை மட்டுமே முன்னணி கேரக்டர்களாக கொண்டு இந்த தொடர் அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.

இந்தத் தொடரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கோபியிடம் இருந்து வீட்டை மீட்கும்பொருட்டு, அதிகமான பிரச்சினைகளை சந்தித்து அவருக்கு 18 லட்சம் ரூபாய் கொடுத்து, வீட்டை தனது பெயரில் ரிஜிஸ்டர் செய்கிறார் பாக்கியா. இதையடுத்து, அந்த வீட்டைவிட்டு தன்னுடைய மனைவி ராதிகாவுடன் வெளியேறுகிறார் கோபி. இதனால், கோபியின் அம்மா ஈஸ்வரி, மனமுடைந்தாலும் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கோபி மற்றும் ராதிகாவின் டார்ச்சர் இல்லாமல் நிம்மதி அடைகின்றனர்.
இதையடுத்து இனியாவின் கல்லூரியிலேயே படிப்பதற்காக சேர்கிறார் பாக்கியா. இதை கேள்வி கேட்பதற்காக அவருடைய ஆங்கில வகுப்பு பயிலும் இன்ஸ்டியூட்டிற்கு செல்லும் கோபி, அங்கு பழனிச்சாமி மற்றும் பாக்கியா இடையிலான காதல் டாஸ்க்கை பார்த்து அதிர்ச்சியடைகிறார். வகுப்பில் டாஸ்க் ஒன்றிற்காக பழனிச்சாமி, பாக்கியாவை பார்த்து ஐ லவ் யூ சொல்கிறார். இதனால் கடுப்பாகும் கோபி, பாக்கியாவை வழியில் மறித்து, சாலையென்றும் பார்க்காமல் சண்டை இழுக்கிறார்.

பாக்கியா அதிகமாக ஆட்டம் போடுவதாக திட்டி சாலையில் அவரை மற்றவர்கள் பார்க்க அவமானப்படுத்துகிறார். அவருக்கு பதிலடி கொடுக்கிறார் பாக்கியா. அவர் ஒழுக்கமாக இல்லாமல், மற்றவர்கள் ஒழுக்கத்தை கேள்வி கேட்க எந்த அருகதையும் இல்லை என்று பதிலுக்கு ஆத்திரத்துடன் கூறுகிறார். அவர்கள் வாக்குவாதம் மற்றும் சண்டையை அடுத்து, அங்கு போலீசார் வருகின்றனர். இதையடுத்து யார் என்றே தெரியாத கோபி, தன்னிடம் சண்டையிடுவதாக பாக்கியா புகார் கூறுகிறார்.
இதனால் கோபியை போலீசார் எச்சரிக்கை செய்கின்றனர். போலீசாரிடம் அவமானப்படும் கோபி, தொடர்ந்து பழனிச்சாமி வீட்டிற்கு சென்று, அவரது அம்மாவிடம் அவர்கள்து உறவு குறித்து போட்டுக் கொடுக்கலாம் என்று செல்கிறார். இதனால் இந்த விவகாரத்திற்கு ஒரு விடிவு கிடைக்கும் என்று நினைத்து, பழனிச்சாமியின் அம்மாவிடம் பாக்கியா மற்றும் பழனிச்சாமி குறித்து பேசுகிறார். இதனால் அவர் மகிழ்ச்சியே அடைகிறார். பழனிச்சாமிக்கு பிடித்திருந்தால் திருமணம் செய்யவும் தான் தயார் என்று கூறுகிறார். இதனால் கோபிக்கு அதிர்ச்சி மேலும் அதிகரிப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











