Baakiyalakshmi: வண்ணாரப்பேட்டையில.. கொண்டாட்டத்தில் பாக்கியா அண்ட் டீம்.. கடுப்பான கோபி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களுடன் ரசிகர்களை அணுகி வருகிறது.
இந்தத் தொடரில் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை கொடுத்து வருகிறார் இயக்குநர். கடந்த சில வாரங்களாக இது மிஸ்ஸிங்காக இருந்தது.
இதனால் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த பாக்கியலட்சுமி கடந்த சில வாரங்களாக சறுக்கலில் உள்ளது. டிஆர்பியிலும் சறுக்கி மூன்றாவது இடத்தில் உள்ளது.

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரால் ரசிகர்கள் உற்சாகம்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் பாக்கியலட்சுமி தொடர், இன்றைய எபிசோட்டிலும் பல சுவாரஸ்யங்களை கொண்டுள்ளது. இனியாவின் கல்லூரி ப்ராஜெக்ட்டிற்காக கோபி -இனியா போட்டிருந்த சாலை ட்ரிப்பில் பங்கேற்க முடியாத நிலையில் அதை கேன்சல் செய்கிறார் கோபி. ராதிகாவின் மகள் மயூ, பெரிய மனுஷியானதால் அந்த பங்க்ஷனில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்படுகிறது.
இந்நிலையில் தன்னுடைய மகளின் ப்ராஜெக்ட்டிற்காக கைக்கொடுக்கிறார் பாக்கியா. தன்னுடைய மாமியாரையும் செல்வியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, அவர்கள் இந்த சாலை பயணத்தை மேற்கொள்கின்றனர். டிரைவரையும் எழில் ஏற்பாடு செய்து கொடுக்கிறார். டிரைவரிடம் கோபியின் விசாரணையை தொடர்ந்து இந்தப் பயணத்தில் நான்கு பெண்களும் சிறப்பாக ஈடுபடுகின்றனர். ஆனால் தன்னுடைய அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டதாகவும் ஆபத்தான கட்டத்தில் அவர் உள்ளதாகவும் கூறி டிரைவர் பாதியிலேயே விட்டுவிட்டு செல்கிறார்.
இதனால் என்ன செய்வது என்று முழிக்கும் பாக்கியாவிற்கு பழனிச்சாமி கொடுக்கும் அட்வைஸ் மீண்டும் கைக்கொடுக்கிறது. தானே இந்த பயணத்தில் காரை ஓட்டும் முடிவை அவர் எடுக்கிறார். இதனால் இனியா, செல்வி மற்றும் ஈஸ்வரி மூவருமே பதற்றத்திற்கு உள்ளாகிறார்கள். ஆனால் பாக்கியா சிறப்பாக ஓட்டுவதையடுத்து இனியா மற்றும் செல்வி இருவரும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் ஈஸ்வரி மட்டும் தொடர்ந்து பதற்றமாகவே காணப்படுகிறார்.
இந்நிலையில், இனியாவும் செல்வியும் ஜாலி மூடிற்கு மாறி, வண்ணாரப்பேட்டையிலே பாடலை ஒலிக்கவிட்டு, ஆட்டம் பாட்டத்துடன் பயணத்தை தொடர்கிறார்கள். இந்த உற்சாகத்தில் பாக்கியாவும் இணைகிறார். ஆனால் ஈஸ்வரி மட்டும் தொடர்ந்து பயத்துடன் காணப்படுகிறார். இந்நிலையில் இனியாவிற்கு கோபி கால் செய்கிறார். அப்போது நிகழ்ந்ததை அறித்து, உடனடியாக காரை நிறுத்தும்படியும் தான் டிரைவரை அனுப்புவதாகவும் திரும்ப வீட்டிற்கே வந்துவிடும்படியும் கூறுகிறார்.

இடியட் பாக்கியா என்று கடுப்புடன் திட்டுகிறார். வழக்கமான கோபியின் இந்த பேச்சை கவனத்தில் கொள்ளாமல் காரை தானே தொடர்ந்து ஓட்டுகிறார் பாக்கியா. கோபியின் அடுத்த காலை கட் செய்கிறார். தொடர்ந்து இரவு பயணமும் மேற்கொள்கிறார். அவர்கள் அனைவரும் ஒரு ஹோட்டலுக்கு செல்கின்றனர். ஆட்கள் அதிகமில்லாத நெடுஞ்சாலை ஹோட்டல் ஈஸ்வரிக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சுத்தமாக இருக்குமா என்றும் அவர் யோசிக்கிறார். பழங்களை அதிகமாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
இதனிடையே, இந்த விஷயங்கள் எதுவும் தெரியாமல் எழில், வீட்டிற்கு திரும்புகிறார். அங்கு யாருமில்லாத நிலையில், நிலாவும் தூங்குவதாக அமிர்தா கூறுகிறார். தொடர்ந்து அமிர்தாவுடன் ரொமான்ஸ் செய்கிறார் எழில். சிறப்பான பேக்கிரவுண்ட் பாடலுடன் இவர்களது ரொமான்ஸ் தொடர்கிறது. இதனிடையே வீட்டிற்கே வராமல், மாலினியின் வீட்டிலேயே தஞ்சமடைகிறார் செழியன். இவ்வாறாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











