Baakiyalakshmi: எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்.. மாலினியின் உறவை முறிக்க போராடும் செழியன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர்.

இந்தத் தொடரின் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கோபி, ராதிகா, பாக்கியா என லீட் கேரக்டர்களை இந்தத் தொடர் கொண்டுள்ளது.

இவர்களை சுற்றியே அதிகமான கதைக்களங்கள் காணப்பட்ட நிலையில், தற்போது செழியன், அமிர்தா, கணேஷ், எழில் என அடுத்தடுத்த கேரக்டர்களை மையமாக கொண்டும் கதைக்களங்கள் வெளிப்பட்டு வருகின்றன.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes everyone thrilling

பாக்கியலட்சுமி தொடரின் புதிய எபிசோடால் ரசிகர்கள் அதிர்ச்சி: விஜய் டிவியின் முன்னணி தொடராக ரசிகர்களுக்கு சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்தத் தொடரில் தன்னுடைய கணவனின் அன்பை பெற முடியாமல் ஏமாற்றத்திற்கு உள்ளாகிறார் பாக்கியா. தொடர்ந்து தன்னுடைய கணவன் தன்னை ஏமாற்றி பெற நினைத்த விவாகரத்தை தானே மனமுவந்து கொடுக்கிறார். தொடர்ந்து கோபி வீட்டை விட்டு வெளியேறவும் செய்கிறார். கோபியின் பெற்றோரையும் தன்னுடனேயே வைத்துக் கொள்கிறார்.

தன்னுடைய குடும்பம், குழந்தைகள், மாமனார் -மாமியார் இவர்களுக்காகவும் தன்னுடைய மருமகள்களுக்காகவும் அதிகமாக மெனக்கெடும் பாக்கியா, ஒருகட்டத்தில் கோபியின் பெயரில் இருக்கும் வீட்டை, 20 லட்சம் ரூபாய் கொடுத்து கைவசப்படுத்துகிறார். இதனால் முன்னதாக சவால்விட்ட கோபி, தன்னுடைய இரண்டாவது மனைவி ராதிகாவுடன் வீட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படுகிறது. இதனால் பாக்கியா மீது மிகுந்த கடுப்புடன், அவரது வளர்ச்சியை தொடர்ந்து குலைக்கிறார் கோபி.

இதனிடையே, பாக்கியாவின் வளர்ச்சியால், தன்னுடைய குடும்பத்தினரிடையே தனக்கு மரியாதை இல்லாத சூழல் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத கோபி மற்றும் அவரது இரண்டாவது மனைவி ராதிகா, இருவரும் பாக்கியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர். இதன் ஒருபகுதியாக, தன்னுடைய அலுவலகத்தில் பாக்கியாவின் கேன்டீன் கான்டிராக்டை ரத்து செய்கிறார் ராதிகா. இதனால் அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறார்.

இதனிடையே செழியன் -ஜெனி தம்பதிக்கு பெண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய மனைவி பிரசவத்திற்காக சென்றபொழுது, மாலினியிடம் நெருங்குகிறார் செழியன். அந்தப் பழக்கம் தற்போது அவருக்கே வினையாக முடிகிறது. எப்போதும் செழியன் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் மாலினி, குழந்தை பிறந்த நேரத்தில், செழியனை தொடர்ந்து டார்ச்சர் செய்து, தற்கொலை மிரட்டல் விடுக்கிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes everyone thrilling

இதனால் செய்வதறியாது திகைக்கும் செழியன் மீது, பாக்கியாவிற்கும் சந்தேகம் வருகிறது. இந்நிலையில், மாலினியை நேரில் சந்திக்கும் செழியன், மாலினிக்கு தன்னுடைய குழந்தை உள்ளிட்டவற்றை புரிய வைக்கிறார். தங்களின் உறவை முறித்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாத மாலினி, இந்த உறவை தான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றும் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார். இதனால் செழியன் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X