Baakiyalakshmi: மாற்றி மாற்றி கைக்கொடுத்த மகன்கள்.. நெகிழ்ச்சியில் பாக்கியா.. அப்ப கோபி நிலை?
சென்னை: விஜய் டிவியின் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி தொடரில் மிகவும் பரபரப்பான எபிசோட்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்தத் தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் சிறப்பான கதைக்களத்தை கொண்டு இயக்குநர் வடிவமைத்துள்ளதால் ரசிகர்கள் சீரியலை கொண்டாடி வருகின்றனர்.

நாளுக்கு நாள் இந்தத் தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், Urban Categoryயிலும் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியல் முதலிடத்தில் உள்ளது.
கணவனிடம் விட்ட சவாலுக்கு கைக்கொடுத்த மகன்கள்: விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடர், ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. இந்தத் தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள், சிறப்பான காட்சி அமைப்புகளை கொண்டு ஒளிப்பரப்பாகி வருவதால் ரசிகர்கள் இந்தத் தொடரை கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து இந்த சீரியலுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து, டிஆர்பியிலும் முன்னிலை பெற்றுள்ளது. மேலும் தொடர்ந்து சேனலின் முன்னணி தொடராகவும் இருந்து வருகிறது.

இது மட்டுமில்லாமல் Urban categoryயிலும் இந்தத் தொடர் சன் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு தொடர்ந்து முதலிடத்தை பெற்று வருகிறது. இரண்டாவது இடத்தில்தான் சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர் உள்ளது. இந்த தொடரில் சிறப்புக்கு முக்கியமான காரணமாக குறைவான கேரக்டர்களை கொண்டு நிறைவான எபிசோட்களை தருவதுதான் என்ற விமர்சனங்கள் கூறப்பட்டு வருகின்றன. ஒரு சில சீரியல்களில் முன்னணி கேரக்டர்களுடன் கிளைக்கதைகளை சேர்த்து, ரசிகர்களை குழப்புவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் கோபி, பாக்கியா, ராதிகா மற்றும் அவர்களின் சில உறவுகளை மட்டுமே கொண்டு, கதையில் பல்வேறு ட்விஸ்ட்களை அரங்கேற்றி வருகிறார் இயக்குநர். இடையில் பழனிச்சாமி என்ற கேரக்டர் இணைக்கப்பட்டது. ஒரு பெண்ணுக்கு சிறப்பான தோழன் அமைந்தால், அவரது வாழ்க்கையில் வெற்றி என்பது மிகவும் எளிதானது என்பதை இந்தக் கேரக்டர் மூலம் தெரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால் காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல, அவர்களின் உறவை கொச்சைப்படுத்தும் கோபி மீது கோபப்படாத ரசிகர்கள் இருக்க முடியாது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோபியின் அம்மா ஈஸ்வரியை ஒருமையில் பேசி அவமானப்படுத்துகிறார் ராதிகா. இதற்கு உண்மை தெரியாமல் கோபியின் சப்போர்ட் வேறு. இந்நிலையில், தன்னுடைய மாமியார் நிலைகுலைந்ததை பார்த்து பரிதவிக்கும் பாக்கியா, தான் வீட்டை வாங்குவதற்காக தர வேண்டிய மீதமுள்ள 18 லட்சத்தை ஒரு மாதத்தில் தருவேன் என்றும், அப்படி செய்துவிட்டால் கோபி, குடும்பத்துடன் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் சவால் விடுகிறார்.

அவர் கண்டிப்பாக தரமாட்டார் என்று நினைக்கும் கோபி, இந்த சவாலை ஏற்கிறார். அப்படி கொடுக்கவில்லை என்றால், பாக்கியா, அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறுகிறார். பின்பு, இந்த சவாலுக்காக அதிகமாக பாடுபடுகிறார் பாக்கியா. பாண்டிச்சேரியில் நடக்கும் பிரம்மாண்டமான திருமணத்தின் ஆர்டரை எடுத்து, இரவு பகல் பார்க்காமல் சம்பாதிக்கிறார். ஆனாலும் 10 லட்ச ரூபாய் குறைகிறது. இன்னும் இரு தினங்களில் 10 லட்சத்தை எப்படி புரட்டுவது என்பதை நினைத்து கண்கலங்குகிறார்.
அப்போது அங்குவரும் இளையமகன் எழில், தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த 5 லட்சத்தை கொடுக்கிறார். அதை வேண்டாமென்று பாக்கியா மறுக்க, வற்புறுத்தி கொடுக்கிறார். இந்நிலையில், அங்குவரும் மூத்த மகன் செழியனும் தன்னுடைய பங்கிற்கு 5 லட்சத்தை கொடுக்கிறார். மகன்கள் இவ்வாறு கைக்கொடுக்க நெகிழ்ச்சியில் தான் ஜெயித்துவிட்டதாக கண்கலங்குகிறார் பாக்கியா. இதனிடையே, பணம் கொடுக்க வேண்டிய இறுதி நாளும் வருகிறது. காலையில் பாக்கியா சாமி கும்பிட்டு கொண்டிருக்க அவரை வம்பிழுக்கிறார்கள் கோபியும் ராதிகாவும். இவ்வாறு இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











