Baakiyalakshmi: என்ன தலையை சீவிடுவீங்களா.. பாக்கியா கேட்ட கேள்வி.. அரண்ட கோபி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர் பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சுவாரஸ்யங்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்தத் தொடரில் தற்போது இனியாவின் பிராஜெக்ட் வேலைகளுக்காக கேரளாவிற்கு ட்ரிப் சென்றுள்ளனர் பாக்கியா அண்ட் டீம்.

இதனிடையே அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் மீண்டும் உயிருடன் திரும்பியுள்ள நிலையில், எழில் மற்றும் அமிர்தா என்ன மாதிரியான முடிவெடுப்பார்கள் என்பது ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more fun

கோபியிடம் கோபப்பட்ட பாக்கியலட்சுமி: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்தத் தொடர் கடந்த சில வாரங்களாக சரியான வரவேற்பை பெறவில்லை என்பது டிஆர்பி மூலம் தெரியவந்துள்ளது. இதனால் இரண்டாவது இடத்திற்கு தொடர் தற்போது தள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த தொடர், தற்போது 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளதே டீமிற்கு ஆசுவாசத்தை கொடுத்துள்ளது.

தற்போது இந்தத் தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான கட்டங்களின் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. மயூ பெரிய மனுஷியானதால், இனியாவின் ப்ராஜெக்ட் வொர்க்கில் இணைய முடியாமல் கோபி தவித்த நிலையில், தன்னுடைய மகளின் முதல் ப்ராஜெக்ட் சிறப்பாக அமைய வேண்டி, அந்த ட்ரிப்பில் தன்னுடைய மாமியார் ஈஸ்வரி மற்றும் செல்வியுடன் களமிறங்கினார் பாக்கியா. அந்த ட்ரிப்பில் அவர் சந்தித்த சவால்கள், பிரச்சினைகள் அதை நிதானமாக கையாண்ட விதம் அவரது மாமியார் ஈஸ்வரியையே கவர்ந்துள்ளது.

பாக்கியாவின் நிதானமான போக்கு குறித்து, பாக்கியாவிடமே நேரில் சிலாகித்து பேசிய ஈஸ்வரி, பாக்கியாவை நம்பி தான் எங்கும் போக தயாராக உள்ளதாக தன்னுடைய மகன் கோபியிடம் கூறி, அவரையும் கடுப்பேற்றிய காட்சிகளை பார்க்க முடிந்தது. இதுபோன்ற ட்ரிப்புகளை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் என்று பாக்கியாவிடம் கூற, அவர் வியப்புடன் தன்னுடைய மாமியாரின் மாற்றத்தை பார்க்கும் வகையிலும் காட்சிகள் ஒளிபரப்பாகின.

எதையுமே சந்தேகத்துடனும் பயத்துடனும் அணுகும் அவரது அணுகுமுறை தற்போது மிகவும் மாறியுள்ளது. இந்த ட்ரிப் அவருக்கு இந்த தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. ஆனால் அடுத்தடுத்த பிரச்சினைகளை அவர்கள் சந்தித்த நிலையில், தொடர்ந்து சந்தேகத்துடனும் ஆத்திரத்துடனும் அனைத்திற்கும் பாக்கியாவை தொடர்ந்து குறை சொல்லிக் கொண்டிருந்தார் கோபி. இந்நிலையில் பயணம் நிறைவடைந்து அவர்கள் சென்னை நோக்கிய தங்களது பயணத்தை துவங்கவுள்ளனர்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more fun

இதையடுத்து தன்னுடைய அம்மாவிற்கும் மகளுக்கும் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அவ்வளவுதான் என்று கோபி, பாக்கியாவிடம் மல்லுக்கு நிற்கிறார். அப்படி ஆனால் என்ன செய்வீர்கள் கொலை செய்து விடுவீர்களா, தலையை சீவி விடுவீர்களா என்று பதிலுக்கு கோபியை கேள்விகளால் திணறடிக்கிறார் பாக்கியா. அவர் இவ்வளவு ஆத்திரத்துடன் தன்னிடம் எப்போதும் பேசியதில்லை என்பதால் சமீபத்திய பாக்கியாவின் பேச்சுகள் கோபியை தொடர்ந்து அரண்டு போக செய்து வருகிறது.

இதனிடையே இறந்து போனதாக கருதப்பட்ட அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் உயிருடன் திரும்பி வருகிறார். அவர் தன்னுடைய மனைவி குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பும் நிலையில், உண்மையை கூற முடியாமல் அவரது பெற்றோர் மிகுந்த வேதனை அடைகின்றனர். இதனிடையே, தனக்கு நிலா என்ற மகள் உள்ளதை அறிந்துக் கொள்ளும் கணேஷ், தன்னுடைய மனைவியை விரைவில் பார்க்க வேண்டும் என்று மல்லுக்கு நிற்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X