Baakiyalakshmi: மயூவிற்கு விஷம் வைத்தாரா பாக்கியா.. மாமியாரின் பேச்சால் ஆத்திரமடைந்த கோபி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்களை கவரும் வகையிலான எபிசோட்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன.

தற்போது மயூ பெரிய மனுஷியானதால் இனியாவுடன் கோபி, ரோட் ட்ரிப்பிற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

இதையடுத்து தன்னுடைய மகளை ரோட் ட்ரிப்பிற்கு அழைத்து செல்ல தயாராகிறார் பாக்கியா. கூடவே ஈஸ்வரி, செல்வியும் செல்கின்றனர்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more impressed

மாமியாரின் பேச்சால் ஆத்திரமடைந்த கோபி: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியல் மாஸ் காட்டி வருகிறது. தொடர்ந்து ஒரே மாதிரியான எபிசோட்களை கொடுத்ததால் டிஆர்பியில் சறுக்கிய இந்தத் தொடர், உடனடியாக சுதாரித்துக் கொண்டுள்ளது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், தவறான உறவு, கேரள ட்ரிப் என தொடர் தற்போது களைகட்டி வருகிறது. மயூ பெரிய மனுஷியானதால், இனியாவின் ப்ராஜெக்ட்டிற்காக கேரளா ரோட் ட்ரிப்பிற்கு கோபி செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது.

இதையடுத்து மனமுடைந்து அழும் தன்னுடைய மகளின் கல்லூரி ப்ராஜெக்ட்டிற்காக பாக்கியா கைக்கொடுக்கிறார். இனியாவை அவர் ரோட் ட்ரிப்பிற்கு அழைத்து செல்ல முடிவெடுக்கிறார். கூடவே தன்னுடைய மாமியார் ஈஸ்வரியையும் கூட்டி செல்ல திட்டமிடுகிறார். இவர்கள் கூட்டணியில் செல்வியும் இணைந்துக் கொள்கிறார். மயூவிற்கு பங்ஷன் இருப்பதால் ஒரு வாரம் கழித்து இந்த ட்ரிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று கூறும் கோபிக்கு இந்த இவர்களது பயணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more impressed

இதனால், வீடு தேடி வந்து பாக்கியாவிடம் கத்திவிட்டு போகிறார் கோபி. கேரளாவிற்கு இல்லை, தாம்பரம் கூட பாக்கியாவால் தாண்ட முடியாது என்று இழிவுப்படுத்துகிறார். இதையடுத்து, அவரது அம்மா கொடுக்கும் பதிலடியால் கப்சிப்பாகிறார். தொடர்ந்து மயூவின் பங்ஷனில் கலந்துக் கொள்ளவும் தன்னுடைய பெற்றோரிடம் கேட்கிறார். தொடர்ந்து பாக்கியாவின் அறிவுறுத்தலால் அவர்கள் மயூவை சந்திக்கின்றனர். பாக்கியா செய்துக் கொடுக்கும் இனிப்பை ஈஸ்வரி, மயூவிடம் கொடுக்கிறார்.

அவர்கள் கிளம்பி சென்றதும், ராதிகாவின் அம்மா, தன்னுடைய பேச்சை துவங்கி விடுகிறார். பாக்கியா, தான் கொடுத்த இனிப்பில் மயூவிற்கு விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என்று அவர் பேசுவது ராதிகாவை மட்டுமில்லாமல் அவரது அண்ணனையும் அதிர்ச்சியடைய செய்கிறது. இதனிடையே, இதை கேட்கும் கோபியும் தன்னுடைய மாமியாரிடம் ஆத்திரப்படுகிறார். தன்னுடைய குடும்பத்தினர் யாருக்கும் அதுபோன்ற புத்தி இல்லை என்று கூறுகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more impressed

இந்நிலையில் இன்றைய எபிசோடில் பாக்கியா, ஈஸ்வரி, இனியா செல்வி நால்வரும் தங்களது கேரள ரோட் ட்ரிப்பை துவங்குகின்றனர். எழில் தன்னுடைய நண்பர் மூலமாக டிரைவரை ஏற்பாடு செய்கிறார். இந்நிலையில் அங்கு வரும் கோபி, டிரைவரிடம் அவரது அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கேட்டு விசாரணை செய்கிறார். தன்னுடைய அப்பா முணுமுணுப்பதை கேட்டு, அப்பா இதையெல்லாம் கேட்கத்தான் வேண்டும், என்னுடைய அம்மாவும் மகளும் செல்கிறார்கள் என்று கூறுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X