Baakiyalakshmi serial: கேள்விக்குறியான எழில் வாழ்க்கை.. பழனிச்சாமியிடம் அட்வைஸ் கேட்கும் பாக்கியா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் தற்போது கேள்விக்குறியான தன்னுடைய மகன்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் முயற்சியில் பாக்கியா ஈடுபட்டுள்ளார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more thrilling 02-11-2023

இதுகுறித்து தன்னுடைய முன்னாள் கணவன் கோபியிடம் ஆலோசிக்க முயற்சித்த நிலையில், அது நடக்காமல் போனதால் பழனிச்சாமியிடம் ஆலோசனை கேட்கிறார்.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை பார்த்து ரசிகர்கள் என்ஜாய் செய்து வருகின்றனர். இந்த சீரியலில் உடல்நிலை சரியில்லாத தன்னுடைய மகன் கோபியை தன்னுடைய வீட்டிற்கே அழைத்து வருகிறார் ஈஸ்வரி. இதையடுத்து ராதிகாவும் பாக்கியாவின் வீட்டிற்கே, கோபியுடன் தங்கும் நோக்கத்தில் வருகிறார். முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து அந்த வீட்டில் தங்கி பல குழப்பங்களை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இருவரும் வந்துள்ளது பாக்கியாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கேள்விக்குறியான எழில் வாழ்க்கை: இதனால் மீண்டும் கேள்விக்குறியான தன்னுடைய வாழ்க்கையை மீட்டெடுக்கும் வழி தெரியாமல் பாக்கியா குழப்பத்தில் உள்ள நிலையில், அவருடைய மாமனார் சமாதானப்படுத்துகிறார். இதனிடையே பாக்கியாவின் மகன்கள் செழியன் மற்றும் எழில் இருவரின் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் பாக்கியாவின் குழப்பம் மேலும் அதிகரிக்கிறது. இதையடுத்து கோபியிடம் ஆலோசனை கேட்கும் வகையில் அவரிடம் பேச முயற்சி செய்கிறார் பாக்கியா.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more thrilling 02-11-2023

பழனிச்சாமியிடம் ஆலோசனை: ஆனால் ராதிகாவின் குறுக்கீடால் அந்த முயற்சியை கைவிடுகிறார். ஆனால் இந்த விஷயத்தை அப்படியே விடமுடியாத சூழலில் தன்னுடைய நண்பர் பழனிச்சாமியிடம் அட்வைஸ் கேட்கிறார். செழியன் தவறு செய்துள்ளதாக தான் யூகிப்பதாகவும் அதனால் அவரது வாழ்க்கையில் மாலினியால் பிரச்சினை ஏற்படும் என்றும் தான் அச்சமடைந்துள்ளதாக கூறும் பாக்கியா, ஆனால் எந்தவிதமான தவறும் செய்யாத எழிலின் வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படுவதை தன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் கூறுகிறார்.

எழிலிடம் பேச முற்படும் பாக்கியா: இதையடுத்து இந்த விஷயம் எப்போதாவது எழிலுக்கு தெரியவரும் என்றும் மற்றவர்கள் மூலம் தெரியவருவதை காட்டிலும் பாக்கியாவே எழிலிடம் பேசுவதே சிறப்பாக அமையும் என்று கூறும் பழனிச்சாமி, இந்த விஷயத்தை அமிர்தாவிடம் எப்படி பேசவேண்டும் என்றும் எழிலே முடிவு செய்துக் கொள்ளட்டும என்றும் ஆலோசனை வழங்குகிறார். இதையடுத்து இந்த விஷயத்தை எழிலிடம் பேச முற்படுகிறார் பாக்கியா. ஆனால் அமிர்தா மற்றும் நிலாவுடன் மகிழ்ச்சியாக இருக்கும் எழிலிடம் இதுகுறித்து பேசமுடியாமல் தவிக்கிறார்.

சந்தேகத்தில் கோபி: இதையடுத்து மீண்டும் தொலைபேசி மூலம் பாக்கியாவிடம் பேசும் பழனிச்சாமி இந்த உலகத்தில் தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவும் இல்லை என்றும் கணேஷிடம் ஒரு மாத காலம் டைம் கேட்டுள்ள நிலையில், அதற்குள் எழிலிடம் பேச அறிவுறுத்துகிறார். மேலும் அமைதியாக இந்த விஷயத்தில் உட்கார்ந்து யோசிக்கும்படியும் கூறுகிறார். முன்னதாக பழனிச்சாமியுடன் பாக்கியா பேசுவதை பார்க்கும் கோபி வழக்கம்போல சந்தேகிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X