Baakiyalakshmi: உடனே வீடு திரும்புங்க.. கடுப்பான கோபி.. திட்டித் தீர்த்த ஈஸ்வரி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.
கடந்த வாரத்தில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தத் தொடர், இந்த வாரத்தில் சற்று முன்னேற்றம் கண்டு, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தற்போது இனியாவின் ப்ராஜெக்ட்டிற்காக கேரளாவிற்கு ரோட் ட்ரிப் சென்றுள்ள பாக்கியா, ஈஸ்வரி, செல்வி மற்றும் இனியா அங்கு சந்தித்துவரும் சவால்கள் இடம்பெற்று வருகின்றன.

பாக்கியாவை திட்டிய கோபி -கடுப்பான ஈஸ்வரி: விஜய் டிவியின் முன்னணி தொடராக தொடர்ந்து பல மாதங்களாக மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்த சீரியலில் பாக்கியலட்சுமி, கோபி, ராதிகா என முன்னணி கேரக்டர்களையும் அவர்களது உறவுகளையும் சுற்றியே கதைக்களம் காணப்படுகிறது. 25 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த தன்னுடைய கணவன், தான் நினைத்த வாழ்க்கையை வாழ முடியவில்லை என்று கூறி தன்னை விவாகரத்து செய்ய முடிவு செய்ததால் விரக்தியடையும் பாக்கியா, தானே முன்வந்து அவர் கேட்கும் விவாகரத்தை கொடுக்கிறார்.
இதையடுத்து தன்னை இடியட் என்றும் எதற்கும் லாயக்கில்லாதவள் என்றும் கூறும் தன்னுடைய கணவன் மற்றும் சமூகத்தின் முன்பு தன்னை உயர்த்தி காட்டுகிறார். கேன்டீன், சமையல் கான்டிராக்ட், மசாலா பிசினஸ், ஆங்கில வகுப்பு, கல்லூரி என தன்னை அடுத்தடுத்து பிசியாக்கி சாதித்து காட்டுகிறார். தான் சந்திக்கும் சவால்களை சாதனையாக்கி காட்டும் பாக்கியாவிற்கு பழனிச்சாமி பெரும் உதவியாக இருக்கிறார்.
இனியாவின் கல்லூரி ப்ராஜெக்ட்டிற்காக ரோட் ட்ரிப்பை திட்டமிடுகிறார் கோபி. ஆனால் ராதிகாவின் மகள் மயூ, பெரிய மனுஷியானதால் அந்த ட்ரிப்பில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து கண்கலங்கும் இனியாவிற்கு கைக்கொடுக்கிறார் பாக்கியா. தன்னுடைய மாமியார், செல்வி என கூட்டணி அமைத்துக் கொண்டு அவர் கேரளா ட்ரிப்பிற்கு செல்கிறார். வழியில் அவர் சந்திக்கும பிரச்சினைகள் அனைத்தையும் சிறப்பாக சமாளித்து இந்தப் பயணத்தை இனிமையாக்குகிறார்.
காட்டிற்குள் இவர்களது பயணம் தொடர்ந்த நிலையில், நடுவில் ஈஸ்வரி காணாமல் போகிறார். இதனால் பாக்கியா, இனியா, செல்வி அனைவரும் பரிதவித்துக் கொண்டே தேடுகின்றனர். தொடர்ந்து தன்னுடைய அப்பா கோபியிடம் அழுதபடியே இந்த விஷயத்தை சொல்கிறார் இனியா. இதனால் கடுப்பாகும் கோபி, பாக்கியாவை திட்டித் தீர்க்கிறார். தன்னுடைய அம்மா மற்றும் மகளுக்கு ஏதாவது ஆனால், பாக்கியாவை சும்மா விட மாட்டேன் என்று கூறுகிறார்.

தொடர்ந்து காட்டில் வழி தவறிப் போன ஈஸ்வரியை நீண்ட தேடுதலுக்கு பிறகு கண்டறிகிறார் பாக்கியா. இதையடுத்து மீண்டும் கால் செய்யும் கோபி, பாக்கியாவை திட்டுவதுடன் அம்மாவையும் இனியாவையும் அழைத்துக் கொண்டு, ட்ரிப்பை முடித்துக் கொண்டு வீடு திரும்பவும் கட்டளையிடுகிறார். இதுகுறித்து தன்னுடைய அம்மாவிடமும் அவர் பேச, ஈஸ்வரி, பதிலுக்கு திட்டித் தீர்க்கிறார். தாங்கள் பாதுகாப்பாக இருந்துக் கொள்வதாகவும் கூறுகிறார். இதனால் செய்வதறியாமல் முழிக்கிறார் கோபி.
இதனிடையே, கேன்டீனுக்கு செல்லும் கோபி, அங்குள்ள தன்னுடைய அப்பாவிடம் இதுகுறித்து பேசி திட்டுகிறார். தான் நேரில் சென்று அம்மாவையும் இனியாவையும் அழைத்து வரவுள்ளதாகவும் கூறுகிறார். இதையடுத்து ராதிகா, இது தான் வேலை செய்யும் இடம் எனவும் அங்கே கத்தக்கூடாது என்றும் கூறுகிறார். மேலும் கேரளாவிற்கு சென்றவர்களுக்கு திரும்ப வரத் தெரியும் என்றும் அங்கே போவதாக இருந்தால் மொத்தமாக போகவும் கூறி கோபத்துடன் அங்கிருந்து செல்வதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











