Baakiyalakshmi serial: மீண்டும் மீண்டும் செழியன் வீட்டிற்கு வரும் மாலினி.. மிரளும் செழியன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
பாக்கியாவிற்கு கேன்டீன் கான்டிராக்ட் கைநழுவ காரணமாக அமைகிறார் ராதிகா. இந்த விஷயத்தை பாக்கியாவுடன் இணைந்து கொண்டாடுகிறார் கோபி.
தற்போது மசாலா பிசினஸ் மற்றும் சமையல் கான்டிராக்ட்டில் கவனம் செலுத்த முடிவெடுக்கிறார் பாக்கியா. பணத்தேவைகளுக்காக நகையை அடகு வைக்கிறார்.

பாக்கியாவின் மகன்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள்: விஜய் டிவியின் முன்னணி தொடராக ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்தத் தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. கேன்டீன் கான்டிராக்ட், சமையல் கான்டிராக்ட், மசாலா பிசினஸ், கல்லூரி, ஆங்கில வகுப்பு என பல வேலைகளில் மிகவும் பிசியாக காணப்பட்டார் பாக்கியா. இந்நிலையில் ராதிகாவால் பாக்கியாவின் கேன்டீன் கான்டிராக்ட் பறிபோகிறது. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்.
தான் வாங்கிய லோன் மற்றும் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி போன்றவற்றை சமாளிப்பதற்காக அவர் தன்னுடைய நகைகளை அடமானம் வைத்து செட்டில் செய்கிறார். தொடர்ந்து பழனிச்சாமி அவருக்கு பணஉதவி செய்வதாக கூறுவதையும் மறுக்கிறார். தான் மிகவும் விரும்பி செய்த கேன்டீன் கான்டிராக்ட் வேலையில் ஏற்பட்ட பிரச்சினைகளை தான் ஒருவராக இருந்து சமாளிக்க விரும்புவதாக அவரிடம் கூறுகிறார்.
இதனிடையே செழியனுக்கு குழந்தை பிறந்துள்ளதால் அவர் ஜெனி மற்றும் குழந்தை மீது மிகுந்த அக்கறையுடன் வீட்டிலேயே அவர்களுடன் நேரம் செலவழிக்க விரும்புகிறார். முன்னதாக மாலினியுடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்ட நிலையில், செழியனை விட்டுக் கொடுக்க முடியாது என்று மாலினி கூறுகிறார். இதனால் அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்படுகிறது. இதையடுத்து தொடர்ந்து செழியனை சந்திக்கும் வகையில் அவர்களது வீட்டிற்கே தொடர்ந்து வருகிறார் மாலினி.

மாலினியின் விவகாரம் தன்னுடைய குடும்பத்தினருக்கு தெரிந்துவிடுமோ என்று பரிதவிக்கிறார் செழியன். பாக்கியாவிற்கு இந்த விவகாரத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பார் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் உயிருடன் வந்துள்ள நிலையில், தன்னுடைய மனைவி மற்றும் மகளை விட்டுக் கொடுக்க முடியாது என்று அவரும் ஒருபக்கம் முரண்டு பிடித்து வருகிறார்.
இதை கேள்விப்படும் கணேஷின் பெற்றோர், சென்னைக்கே வந்து, தங்களின் மகனிடம் அமிர்தா வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என்று கூறுகின்றனர். ஆனால் தன்னுடைய மனைவி அமிர்தா மற்றும் மகள் நிலாவை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றும் அவர்களுடன்தான் ஊருக்கு வருவேன் என்றும் கணேஷ் அழிச்சாட்டியம் செய்கிறார். இதனால் பரிதவிக்கும் கணேஷின் பெற்றோர், பாக்கியாவை தனியாக ஓரிடத்தில் அழைத்து உண்மையை கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











