Baakiyalakshmi: இனிமேல் கேன்டீனை நடத்த முடியாது.. பாக்கியாவிற்கு செக் வைத்த ராதிகா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக உள்ளது பாக்கியலட்சுமி. தற்போது டிஆர்பியில் இந்தத் தொடர் சரிவை சந்தித்துள்ளது.

தொடர்ந்து பல மாதங்களாக முதல் இடத்தில் இருந்த பாக்கியலட்சுமி தொடர் தற்போது சில புள்ளிகள் கீழிறங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது.

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர் தற்போது அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more thrilling 19-08-23

கேன்டீனில் சொதப்பிய பாக்கியலட்சுமி: விஜய் டிவியின் நம்பர் ஒன் இடத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிலை கொண்டிருந்தது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து சிறப்பாக அமைந்து வந்த நிலையில், கடந்த இரு வாரங்களாக தொடரில் தொய்வு காணப்பட்டது. இதையடுத்து டிஆர்பியில் சரிவை சந்தித்த பாக்கியலட்சுமி தொடர், அர்பன் கேட்டகரியில் தற்போது இரண்டாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

சேனலின் சிறகடிக்க ஆசை தொடர் அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்களை தந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. பாக்கியா கேன்டீன் கான்டிராக்ட் எடுத்துள்ள அலுவலகத்தில் ஒரு சாதனையை கொண்டாடுவதற்காக அவருக்கு சமையல் கான்டிராக்ட் கொடுக்கப்படுகிறது. இதில் காலையிலேயே அலுவலகம் வரும் பாக்கியா, அனைத்தையும் சரிபார்த்துவிட்டு, ஒரு சில டிஷ்களை மட்டும் தனக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் விட்டுவிட்டு கல்லூரிக்கு செல்கிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more thrilling 19-08-23

ஆனால் திறமையாக அனைவரையும் வேலை வாங்கும் செல்வி, தன்னுடைய சொந்த பிரச்சினை காரணமாக, இதில் சில சொதப்பல்களை செய்ய, ராதிகாவிற்கு பாக்கியாவை பழிவாங்க கிடைக்கிறது சான்ஸ். இதையடுத்து, நிறுவன உரிமையாளரிடம் பேசி, அவர்களது கான்டிராக்டை கேன்சல் செய்ய வைக்கிறார் ராதிகா. தொடர்ந்து, பாக்கியாவை அங்கே வரவழைத்து ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறார். கேன்டீன் கான்டிராக்டை தொடர முடியாது என்று கூறுகிறார்.

இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகும் பாக்கியா, தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார். அப்போது பழனிச்சாமி மற்றும் லோபிகாவும் அங்கே இருக்கின்றனர். பாக்கியா அழுவதை தொடர்ந்து, அவரை சமாதானப்படுத்த முயல்கிறார் பழனிச்சாமி. ஆனால் கேன்டீன் கைவிட்டு போவதற்கு காரணமான செல்வி உள்ளிட்டவர்களிடம் ஆத்திரத்தை வெளிப்படுத்த முடியாமல் கதறுகிறார் பாக்கியா. தன்னுடைய குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருக்கும் கேன்டீன் கான்டிராக்ட் கைவிட்டு போவதை அவரால் ஏற்கமுடியவில்லை.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans more thrilling 19-08-23

முன்னதாக ராதிகாவிடமும் கெஞ்சுகிறார். மன்னிப்பு கேட்கிறார். ஆனால் ராதிகா மனமிறங்கவில்லை. இந்நிலையில், அடுத்தது என்ன செய்ய முடியும் என்று யோசிக்கலாம் என்று பழனிச்சாமி ஆறுதல் கூறுகிறார். ஆனால் கேன்டீன் கைவிட்டு போவதை பார்க்கும் பாக்கியாவின் அழுகை மற்றும் கதறல் தொடர்கிறது. இதை பார்க்கும் பழனிச்சாமி செய்வதறியாமல் திகைப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த எபிசோட்களில் பழனிச்சாமி உதவியுடன் இந்தப் பிரச்சினையில் இருந்து அவர் வெளியில் வருவார் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X