Baakiyalakshmi: பிரின்சிபல் முன் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கும் பாக்கியா.. அதிர்ச்சியில் கோபி!
சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடரான பாக்கியலட்சுமியில் அதிரடி திருப்பங்களுடன் எபிசோட்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன.
கூட்டுப்புழுவாக தன்னுடைய வீடே தனக்கு பிரதானமாக வாழ்ந்துவந்த பாக்கியாவிற்கு அவரது விவாகரத்து மிகப்பெரிய முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
ஆங்கிலத்தில் பேச முடியுமா என கோபி மற்றும் ராதிகா தொடர்ந்து அவமானப்படுத்திய நிலையில், அதை எதிர்த்து தற்போது ஆங்கில வகுப்பிற்கு சென்று தன்னை முன்னேற்றிக் கொண்டுள்ளார் பாக்கியா.

ஆங்கிலத்தில் வெளுத்துவாங்கும் பாக்கியாவை திகைப்புடன் பார்த்த கோபி: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடரான பாக்கியலட்சுமி தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் பார்வையாளர்களை வெகுவாக இம்ப்ரஸ் செய்து வருகின்றன. தன்னுடைய கணவனுக்கு கீழ்படிந்து, அவரே தன்னுடைய வாழ்க்கையின் ஆதாரம் என்று கூட்டுப்புழுவாக வாழ்ந்துவந்த பாக்கியாவிற்கு இடியாக இறங்குகிறது அவரது விவாகரத்து முடிவு. தன்னை ஏமாற்றித் தனனிடம் தன்னுடைய கணவன் வாங்க நினைத்த விவாகரத்தை தானே மனமுவந்து தருகிறார் பாக்கியா.
இதையடுத்து தன்னை எல்லா வகையிலும் முன்னேற்றிக் கொள்கிறார். தன்னுடைய குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்காக தனக்கு பிடித்தமான சமையல் தொழிலையே கையில் எடுக்கிறார். சமையல் கான்டிராக்ட்கள் எடுத்து பெரிய அளவில் சாதிக்கிறார். ராதிகா பணிபுரியும் அலுவலகத்திலேயே சமையல் கேன்டீன் கான்டிராக்டையும் எடுத்து சிறப்பாக கொண்டு செல்கிறார். ராதிகா கொடுக்கும் குடைச்சல்களையும் சவாலாக ஏற்று சாதிக்கிறார்.
இதனிடையே கோபியிடம் இருந்து தாங்கள் வசித்துவரும் வீட்டை மீட்கும் சவாலையும் சண்டை ஒன்றில் ஏற்று, அதையும் பிரம்மாண்டமான சமையல் கான்டிராக்ட்டை எடுத்தும் தன்னுடைய மகன்களின் உதவியுடனும் பெறுகிறார். கோபி மற்றும் ராதிகாவை வீட்டை விட்டு துரத்துகிறார். அதேநேரத்தில் பாக்கியாவின் வளர்ச்சியில் பயங்கரமாக கடுப்பாகும் கோபி மற்றும் ராதிகா தொடர்ந்து பாக்கியாவிற்கு இடைஞ்சல் கொடுத்து வருகின்றனர்.
தன்னுடைய மகள், +2வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, தான் படிக்கும் பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்வாக, அவர் விரும்பும் விஸ்காம் படிப்பையே படிக்க சப்போர்ட் செய்கிறார். ஆனால் கோபியோ, தான் விரும்பும் படிப்பைதான் இனியா படிக்க வேண்டும் என்று சண்டையிடுகிறார். ஆனால் பாக்கியா, அதை மறுத்து, இனியாவை அவர் விரும்பும் படிப்பில் விரும்பிய கல்லூரியில் படிக்க வைக்கிறார். இதற்காக அதிகமாக ஃபீஸ் கட்டும் சூழலையும் தனியாக சமாளிக்கிறார்.

இன்றைய எபிசோடில் இனியாவிற்கு ஃபீஸ் கட்டுவதற்காக பணம் இல்லாமல் தன்னுடைய நண்பனிடம் கடன்வாங்கி கட்ட வரும் கோபி, முன்னதாக பாக்கியாவே பணத்தை கட்டியதைக் கேட்டு மலைக்கிறார். தன்னால் புரட்ட முடியாத பணத்தை அவர் எப்படி கட்டினார் என்று திகைக்கிறார். ஆனாலும் சமாளித்துக் கொண்டு பிரின்சிபலை பார்க்க இனியாவுடன் செல்கிறார். பாக்கியா உள்ளே வந்தால் பேசுவதற்கு திணறுவார் என்றும் அதனால் வரவேண்டாம் என்றும் அவமானப்படுத்துகிறார்.
ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இனியாவிற்காக பிரின்சிபலை சந்திக்கும் பாக்கியா, அவரிடம் ஆங்கிலத்திலேயே பேசி வெளுத்து வாங்குகிறார். இதை சிறிதும் எதிர்பார்க்காத கோபி, இது எப்படி சாத்தியம் என்று தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார். இதற்காக முன்னதாக வீட்டிலேயே ஜெனி மற்றும் எழிலிடம் பாக்கியா, ரிகர்சல் செய்துக் கொண்டதும் தெரியவருகிறது. இதையடுத்து பாக்கியாவை இனியாவும் திகைப்புடன் பார்க்க, தன்னம்பிக்கையுடன் தன்னுடைய மகளுடன் நடைபோடுகிறார் பாக்கியா.


Click it and Unblock the Notifications











