Baakiyalakshmi: பாக்கியாவை வேவு பார்க்கும் கோபி.. அதிர்ச்சியில் பாக்கியா!

சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி தொடர்ந்து கடந்த சில தினங்களில் தொய்வடைந்த நிலையில் தற்போது மீண்டும் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.

இந்தத் தொடரில் ஆன்டி ஹீரோவாக இருந்தபோதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் கோபியாக நடித்துவரும் சதீஷ்.

தன்னுடைய உடல்மொழி மற்றும் காமெடி கலாட்டாக்களால் இந்த தொடரை சுவாரஸ்யமாக்கி வருகிறார் கோபி.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans shocking

பாக்கியலட்சுமி தொடரின் புதிய எபிசோடால் ரசிகர்கள் அதிர்ச்சி: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடரான பாக்கியலட்சுமி தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களாக பாக்கியலட்சுமி கல்லூரியில் இணைந்த காட்சிகளின் தொகுப்பாக வெளியானது இதன் எபிசோட்கள். இந்நிலையில் இந்த வாரத்தில் தன்னுடைய முதலிடத்தை சிறகடிக்க ஆசை தொடரிடம் விட்டுக் கொடுத்துள்ளது. Urban மற்றும் Urban +Rural கேட்டகரியில் இந்த வாரத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது சிறகடிக்க ஆசை. இரண்டாவது இடத்திற்கு கீழிறங்கியுள்ளது பாக்கியலட்சுமி தொடர்.

இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி தொடர் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. கல்லூரிக்கு சென்றாலும் மீண்டும் கோபியின் டார்ச்சரை எதிர்கொள்கிறார் பாக்கியா. தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து வேவு பார்க்கிறார் கோபி. அவரது ஆங்கில வகுப்பிற்கு அடிக்கடி வந்து டார்ச்சர் கொடுக்கிறார். நேற்றைய தினம் பாக்கியாவிடம் பழனிச்சாமி பேசுவதை வைத்து கோபி கோபமும் ஆத்திரமும் அடைவதாக காட்சிகள் காணப்பட்டன.

இந்நிலையில் இன்றைய தினம், ஆங்கில வகுப்பிற்கு வரும் கோபி, பழனிச்சாமியும் பாக்கியாவும் பேசுவதை பார்க்கிறார். அவரது கல்லூரி குறித்து பழனிச்சாமி கேள்வி எழுப்ப, மிகுந்த ஆர்வத்துடன் பதிலளிக்கிறார் பாக்கியா. கல்லூரி வாசலுக்கு சென்றாலே, றெக்கை முளைத்தது போல இருப்பதாக கூறுகிறார். இதற்கெல்லாம் காரணமே பழனிச்சாமிதான் என்றும் தான் இதுவரை இல்லாத அளவில் இவ்வளவு சந்தோஷமாக இருப்பதற்கு அவர்தான் காரணம் என்றும் கூறுகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans shocking

பாக்கியாவை பார்ப்பதற்காக அங்குவரும் கோபி, இந்தக் காட்சிகளை பார்க்கிறார். இதனால் அவருக்கு ஆத்திரம் அதிகரிக்கிறது. இனியா ஸ்கூல் பர்ஸ்ட் எடுத்தது, இரு மகன்களுக்கு திருமணம் நடந்தது, செழியனுக்கு குழந்தை பிறக்கப் போவது இதிலெல்லம் பாக்கியாவிற்கு சந்தோஷம் ஏற்படவில்லையா என்று அவர் மருகுகிறார். பழனிச்சாமியால்தான் சந்தோஷம் வந்ததா என்றும் தனக்குள்ளேயே கேட்டு கோபமடைகிறார்.

தொடர்ந்து அவர்கள் இருவரையும் நேருக்கு நேர் சந்திக்கும் கோபி, கோபத்துடன் பேசுகிறார். அங்கே என்ன செய்கிறார் என பாக்கியா கேட்க, ஆங்கில வகுப்பில் பாக்கியா செய்யும் தில்லாலங்கடி வேலைகளை பார்க்கவே தான் வந்ததாகவும், பழனிச்சாமியால்தான் தான் அதிகமான மகிழ்ச்சியுடன் இருப்பதாக கொஞ்சியதாகவும் சுட்டிக் காட்டுகிறார். வீட்டில் கண்ணகி போல இருக்கும் அவர், வெளியில் வந்தால் என்னமாதிரியான வேலைகளை பார்க்கிறார் என்றும் ஆத்திரத்துடன் கேட்கிறார். இதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சியடைவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X