Baakiyalakshmi: கோபியை வீட்டிற்கு அழைத்துவந்த ஈஸ்வரி.. அதிர்ச்சியில் பாக்கியா குடும்பத்தினர்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல்.

இந்தத் தொடரில் தன்னுடைய முன்னாள் கணவன் கோபி, மாமனார், மாமியார், மகன்கள், மருமகள்கள் இவற்றுடன் தன்னுடைய கேரியரையும் காப்பாற்றிக் கொள்ள பாக்கியா தொடர்ந்து போராடி வருகிறார்.

தற்போது கோபியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருகிறார் ஈஸ்வரி.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans shocking 21-10-2023

கோபியை மீண்டும் வீட்டிற்கு அழைத்துவந்த ஈஸ்வரி: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடர்ந்து அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்தத் தொடரில் கோபி, ராதிகா பாக்கியா மற்றும் அவர்களது நெருங்கிய சொந்தங்களை மட்டுமே கொண்டு அடுத்தடுத்த கதைக்களங்களை கொடுத்து வருகிறார் இயக்குநர். சீரியல்களில் அதிகமாக பெண்களை மட்டுமே வில்லிகளாக காட்டிவரும் நிலையில், இந்தத் தொடரில் சிறப்பான வில்லனாக கோபி காட்டப்படுகிறார்.

கோபியும் அவரது சூழ்நிலைகள் மற்றும் பாக்கியாவால் அவருக்கு ஏற்படும் அவமானங்களை கருத்தில் கொண்டு அவரது வளர்ச்சியை தடுப்பதாக காட்டப்படுகிறது. மேலும் அவரது இரண்டாவது மனைவி ராதிகாவிற்கும் பாக்கியாவை அவர் வெறுப்பதற்கான காரணங்கள் நியாயமானதாக காட்டப்படுகிறது. பாக்கியாவிற்கு அவரது வளர்ச்சிக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்துவரும் கோபி, சில சமயங்களில் அவருடன் இணக்கமாக இருப்பது போன்ற காட்சிகளும் காட்டப்படுகின்றன. ஜெனிக்கு குழந்தை பிறந்த சந்தர்ப்பத்தை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இதனிடையே, நிதி பிரச்சினையில் சிக்கி தவிக்கிறார் கோபி. இது தெரியாமல் ராதிகா தொடர்ந்து அவருக்கு பணத்தை கேட்டு டார்ச்சர் கொடுக்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் அவருக்கு பேனிக் அட்டாக் ஏற்படுகிறது. தன்னுடைய மகனுக்கு இப்படி ஆனதை கேள்விப்படும் ஈஸ்வரி, அவரை தன்னுடைய வீட்டிற்கு கொண்டுவர முயற்சிக்கிறார். முன்னதாக இதுபோல அவர் கோபியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், அவரும் ராதிகாவும் சேர்ந்து மிகப்பெரிய அழிச்சாட்டியங்களை செய்ததை பார்க்க முடிந்தது.

இதையடுத்து கோபியிடம் 20 லட்சம் ரூபாயை கொடுத்து மிகுந்த போராட்டத்திற்கிடையில் பாக்கியா அந்த வீட்டை மீட்டார். இந்த விஷயத்தில் அவரது மகன்கள் எழில் மற்றும் செழியனும் ஆளுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தனர். அப்போதும் வீட்டை விட்டு போக மாட்டேன் என்று கோபி கூற, ராதிகா தான் அவரை வீட்டை விட்டு வெளியே அழைத்து சென்றார். இந்நிலையில் மீண்டும் கோபியை ஈஸ்வரி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans shocking 21-10-2023

பாக்கியா மற்றும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கோபியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் ஈஸ்வரி. கோபி இந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தால் தான் வீட்டைவிட்டு சென்றுவிடுவேன் என்று பாக்கியா எச்சரிப்பதையும் மீறி ராதிகா வீட்டிற்கு சென்று கோபியை கையோடு அழைத்து வருகிறார் ஈஸ்வரி. அங்கு ராதிகா மற்றும் அவரது அம்மா இருவரையும் குற்றம் சாட்டி அவர் கோபியை பாக்கியாவின் வீட்டிற்கு அழைத்து வருவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X